அவ்வையார்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

தமிழ் இலக்கிய உலகின் பெண்பாற்புலவர்களுள் முதன்மையானவர் அவ்வையார் ஆவார். இவர் தொண்டை நாட்டு மன்னர் அதியமானுக்கு நல்ல நண்பர். நீண்டநாள் வாழ்வைத் தரும் நெல்லிக்கனியை மன்னர் அதியமான் தான் உண்ணாது அவ்வையார் நீண்டநாள் வாழவேண்டும் எனக் கருதி கொடுத்தார் என்பது வரலாற்றுக்கதை. அவ்வையார் என்ற பெயரில் நான்கு பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

அவ்வையார் நூல்கள்[தொகு]

    * ஆத்திசூடி
    * கொன்றை வேந்தன் 
    * நல்வழி
    * மூதுரை
    * ஞானக்குறள்
    * விநாயகர் அகவல் 
    * நாலு கோடிப் பாடல்கள்

அமைவிடம்[தொகு]

தமிழ்ப்புலவர்களுள் சிறப்பிடம் பெற்ற அவ்வையாருக்கு நாகப்பட்டினம் மாவட்டம் , வேதாரண்யம் வட்டம் வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் துளசியாப்பட்டினம் என்ற பகுதியில் அருள்மிகு விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது.வேதாரண்யம் - முத்துப்பேட்டை சாலை மார்க்கத்தில் வாய்மேடு என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

சிறப்பு[தொகு]

இக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அவ்வையார் விழா சிறப்பாக நடைபெறுகிறது.வருடந்தோறும் சித்திரை மாதம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இவ்விழா நடைபெற்கிறது.

சான்று[தொகு]

அவ்வையார் நூல்கள் அவ்வையார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவ்வையார்கோவில்&oldid=2724252" இருந்து மீள்விக்கப்பட்டது