உள்ளடக்கத்துக்குச் செல்

அவேலி மாவட்டம்

ஆள்கூறுகள்: 33°53′07″N 74°06′12″E / 33.8854°N 74.1033°E / 33.8854; 74.1033
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹவேலி
{ضلع حویلی
மாவட்டம்
பாகிஸ்தான் நாட்டின் ஆசாத் காஷ்மீரில் ஹவேலி மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் ஆசாத் காஷ்மீரில் ஹவேலி மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
நாடுபாகிஸ்தான்
பிரதேசம்ஆசாத் காஷ்மீர்
வருவாய் கோட்டம்பூஞ்ச்
தலைமையிடம்போர்வார்டு காகுத்தா
அரசு
 • வகைDistrict Administration
பரப்பளவு
 • மொத்தம்598 km2 (231 sq mi)
மக்கள்தொகை
 (2017)
 • மொத்தம்1,52,124
 • அடர்த்தி268/km2 (690/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஉருது
 • பேச்சு மொழிகள்பகாரி மொழி, கோஜ்ரி மொழி, காஷ்மீரி மொழி
தாலுகாக்கள்3

ஹவேலி மாவட்டம் (Haveli District), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஆசாத் காஷ்மீர் பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 598 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஹவேலி மாவட்ட மக்கள் தொகை 1,52,124 ஆகும்.[2] இம்மாவட்டத்தில் பேசப்படும் முக்கிய மொழிகள் பகாரி மொழி (65%), குஜாரி மொழி (30%) மற்றும் காஷ்மீரி மொழி (5%) ஆகும்.[3][4]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

அவேலி மாவட்டம் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டது. அவைகள்:

  • அவேலி வட்டம்
  • குர்சிதாபாத் வட்டம்
  • மும்தாஜாபாத் வட்டம்

இம்மாவட்டம் 12 ஒன்றியக் குழுக்களையும், 95 கிராமங்களையும் மற்றும் போர்வார்டு ககுத்தா எனும் நகராட்சியையும் கொண்டது.

புவியியல்[தொகு]

பீர் பாஞ்சால் மலைத்தொடரில் 8000 அடி உயரத்தில் ஹவேலி மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மிக உயரமான பெதோரி மலைச்சிகரம் 12,228 அடி உயரத்தில் உள்ளது.[5]இதன் வடக்கிலும், வடகிழக்கிலும் இந்தியாவின் பாரமுல்லா மாவட்டம், தெற்கில் பூஞ்ச் மாவட்டமும், மேற்கில் பாக் மாவட்டம் மற்றும் பூஞ்ச் மாவட்டம், பாகிஸ்தான் எல்லைகளாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "District Haveli (Kahutta)". Government of Azad Jammu & Kashmir. Archived from the original on 8 April 2014. பார்க்கப்பட்ட நாள் 6 July 2013.
  2. "Census 2017: AJK population rises to over 4m" (in en-US). The Nation. http://nation.com.pk/national/27-Aug-2017/census-2017-ajk-population-rises-to-over-4m. 
  3. Statistical Year Book 2020 (PDF). Muzaffarabad: AJ&K Bureau Of Statistics. p. 140. பார்க்கப்பட்ட நாள் 3 March 2022.
  4. Shakil, Mohsin (2012). "Languages of Erstwhile State of Jammu Kashmir (A Preliminary Study)". p. 12.
  5. "Bedori Top Mountain Information".


"https://ta.wikipedia.org/w/index.php?title=அவேலி_மாவட்டம்&oldid=3606728" இலிருந்து மீள்விக்கப்பட்டது