அவென்யூ சாலை, பெங்களூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவென்யூ சாலையின் நுழைவாயிலில் ஒரு கோயில்
பெங்களுருவில் 1890 இல் கனடிய சிற்றாலயம் (வலது)[1]
1890 இல் பெங்களூரு பேட்டின் பிரதான சாலை [2]

அவென்யூ சாலை (Avenue Road) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூர் நகரிலுள்ள ஒரு பரபரப்பான வணிக வீதியாகும். [3] பெங்களூர் நகரின் மையத்தில் இருக்கும் தொன்மையான பகுதிகளில் ஒன்றான சிக்பேட் பகுதியில் இச்சாலை செல்கிறது. நகரின் முக்கிய சாலைகளான மைசூர் சாலை மற்றும் கே கி சாலையையும் இது இணைக்கிறது. கெம்பே கவுடா பேருந்து நிலையம் மற்றும் பெங்களூர் சிட்டி இரயில் நிலையத்திற்கு அருகிலேயே அவென்யூ சாலை உள்ளது.

முன்னதாக, அவென்யூ சாலை தோத்தாபெட் என்று அழைக்கப்பட்டது. [4]

பயன்படுத்தப்பட்ட பழைய புத்தகங்கள், ஆடைகள், நகைகள் மற்றும் அடகு வியாபாரம் ஆகியவற்றில் பாரம்பரிய வர்த்தகத்திற்காக அவென்யூ சாலை நன்றாக அறியப்படுகிறது. பெங்களூரு அவென்யூ சாலையில் இருக்கும் பெங்களூரு பேட் பகுதியில் இலண்டன் சமயப்பரப்பு சங்கத்தின் ரைசு மெமோரியல் சர்ச் அமைந்துள்ளது. கனடிய மொழி அறிஞரும் பெங்களூர் பேட் பிராந்தியத்தின் கல்வி முன்னோடியுமான சகோ பெஞ்சமின் ஓல்ட்டு ரைசின் நினைவாக பேராலயத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1834 ஆம் ஆண்டு வில்லியம் காம்ப்பெல் என்பவர் இப்பேராலயத்தை நிறுவினார். [5][6][7][8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hodder, Edwin (1890). Conquests of the Cross, A Record of Missionary Work throughout the World: Vol. 3: Special Edition. London: Cassell and Company Limited. பக். 325. https://archive.org/details/conquestsofcross03hodd. பார்த்த நாள்: 23 October 2015. 
  2. Rice, Edward Peter (1890). Benjamin Rice or Fifty years in the Master's Service. Piccadilly: London Mission Religious Tract Society. பக். 192. https://archive.org/details/benjaminriceorfi00rice. பார்த்த நாள்: 22 October 2015. 
  3. Bangalore | Bengaluru | Garden City | Bangalore Tourism | Silicon Valley Of India
  4. Bangalore - Information
  5. Rizvi, Aliyeh (27 February 2011). "A Walk Down Avenue Road". A Turquoise Cloud. பார்க்கப்பட்ட நாள் 22 October 2015.
  6. Kumar, G S (12 February 2015). "A Parichay with Avenue Rd’s heritage". Times of India. http://timesofindia.indiatimes.com/city/bengaluru/A-Parichay-with-Avenue-Rds-heritage/articleshow/46205054.cms. பார்த்த நாள்: 22 October 2015. 
  7. "Benjamin Rice". Rices In India: A family devoted to India for 100 years. பார்க்கப்பட்ட நாள் 22 October 2015.
  8. Gourley, B. "Daily Photo: Rice Memorial Church". Stories & Movement: The Sum of a Life. பார்க்கப்பட்ட நாள் 22 October 2015.
  9. "Earlier known as Doddapete, Avenue Road could be as old as Bengaluru". ET Bureau. The Economic Times. 26 March 2015. http://articles.economictimes.indiatimes.com/2015-03-26/news/60515894_1_avenue-road-ranganathaswamy-temple-old-city. பார்த்த நாள்: 22 October 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவென்யூ_சாலை,_பெங்களூர்&oldid=3750140" இலிருந்து மீள்விக்கப்பட்டது