அவுலா சாம்பசிவ ராவ்
அவுலா சாம்பசிவ ராவ் | |
|---|---|
| நீதிபதி, ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றம் | |
| பதவியில் 1967–76 | |
| துணைவேந்தர்-ஆந்திரப் பல்கலைக்கழகம் | |
| பதவியில் 1980–83 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 16 மார்ச்சு 1917 |
| இறப்பு | 27 சூலை 2003 (அகவை 86) |
நீதிபதி ஆவுலா சாம்பசிவ ராவ் (16 மார்ச் 1917, முல்பூரு, குண்டூர் மாவட்டம் – 27 சூலை 2003[1]) ஆந்திரப் பிரதேசத்தின் தலைமை நீதிபதியாகவும், லோக் ஆயுக்தாவாகவும், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றிய இந்திய நீதிபதி ஆவார்.[2][3][4]
ராவ் குண்டூர், சென்னை மற்றும் கொல்கத்தாவில் கல்வி பயின்றுள்ளார். மேலும், இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் சட்டப் பட்டதாரியாக இருந்தார். 1941 ஏப்ரல் 7 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவுசெய்து, 1967 ஏப்ரல் 21 வரை அந்த நீதிமன்றத்திலும், குண்டூர் மற்றும் ஐதராபாத்தில் உள்ள ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றங்களிலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1966 சூலை 14 அன்று, இவர் ஆந்திரப் பிரதேசத்தின் 2வது அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
ராவ் 22 ஏப்ரல் 1967 அன்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் 25 சனவரி 1975 முதல் 10 சனவரி 1976 வரை ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார்.
9 ஏப்ரல் 1978 அன்று நிரந்தர தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட ராவ், 16 மார்ச் 1979 அன்று ஓய்வு பெற்றார். இவர் வால்டேரில் உள்ள ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nath Roy, Manabendra (2003). The Radical Humanist – Volume 67. India: Manabendra Nath Roy. p. 40.
- ↑ "Profile of Justice (retd.) Avula Sambasiva Rao". Archived from the original on 17 January 2008. Retrieved 14 August 2007.
- ↑ "List of Andhra University VCs". Archived from the original on 27 July 2008. Retrieved 14 August 2007.
- ↑ "Govada village panchayathi".
- ↑ Former CJ dead [தொடர்பிழந்த இணைப்பு], Monday, 28 Jul 2003, The Hindu