உள்ளடக்கத்துக்குச் செல்

அவுரா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவுரா
WB-25
மக்களவைத் தொகுதி
Map
அவுரா மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்1,505,099[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
பிரசூன் பானர்ஜி
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024 இந்தியப் பொதுத் தேர்தல்

அவுரா மக்களவைத் தொகுதி (Howrah Lok Sabha constituency; வங்க மொழி: হাওড়া লোকসভা কেন্দ্র) என்பது இந்தியாவின் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் அவுராவை மையமாகக் கொண்டுள்ளது. 25 எண்ணுடைய அவுரா மக்களவைத் தொகுதியில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளும் அவுரா மாவட்டத்தில் உள்ளன.

கண்ணோட்டம்

[தொகு]
மேற்கு வங்காளத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் - 1. கூச் பெஹார், 2. அலிப்பூர்துவர்ஸ், 3. ஜல்பைகுரி, 4. டார்ஜிலிங், 5. ராய்கஞ்ச், 6. பாலுர்காட், 7. மால்டா உத்தர், 8. மால்தாஹா தக்ஷின், 9. ஜாங்கிபூர், 10. பஹராம்பூர், 11. முர்ஷிதாபாத், 12. கிருஷ்ணாநகர், 13. ரணகாட், 14. பங்கான், 15. பாரக்பூர், 16. டம் டம், 17. பராசத், 18. பாசிர்ஹாட், 19. ஜெய்நகர், 20. மதுராபூர், 21. டயமண்ட் ஹார்பர், 22. ஜாதவ்பூர், 23. கொல்கத்தா தக்ஷின், 24. கொல்கத்தா உத்தர், 25. ஹவுரா, 26. உலுபெரியா, 27. செராம்பூர், 28. ஹூக்ளி, 29. அரம்பாக், 30. தம்லுக், 31, காந்தி, 32. கட்டல், 33. ஜார்கிராம், 34. மெதினிபூர், 35. புருலியா, 36. பங்குரா, 37. பிஷ்ணுபூர், 38. பர்தமான் பூர்பா, 39. பர்தாமன் துர்காபூர், 40. அசன்சோல், 41. போல்பூர், 42. பிர்பம்

"அவுரா நகரம் ஊக்ளி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான நகர்ப்புறக் கூட்டமைப்பாகும். மேலும் திட்டமிடப்படாத, அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட குடியிருப்பு, நாட்டின் மிகப்பெரிய தொடருந்து முனையங்களில் ஒன்று, இரும்பு உற்பத்தித் துறை, குறிப்பாக இரும்பு வார்ப்பு ஆலைகள் ஆகியவற்றிற்கு மிகவும் பிரபலமானது" இந்தப் பகுதி என்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.[2]

வார்ப்புத் துறை பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா “சில நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் தொழிற்சாலைகளை மூடிவிட்டன. மற்றவை வாரத்தில் மூன்று நாட்கள் திறந்திருக்கும். ஊதியக் குறைப்பை தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டனர், பெரும்பாலும் முணுமுணுப்பு கூட இல்லாமல், ஒரு காலத்தில் இந்தியாவின் ஷெஃபீல்ட் என்றும், மாநிலத்தின் மிகப்பெரிய தொழிலான அவுராவின் வார்ப்படத் தொழில் இப்போது மூச்சுத் திணறி வருகிறது”[3] என்று இத்தொழிலின் நிலையினை விவரிக்கின்றது.

தி இந்துவின் கூற்றுப்படி, அவுரா, ஸ்ரீராம்பூர் தொகுதிகளில் 25%க்கும் அதிகமான வங்காள அல்லாத வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் இராசத்தான், பீகார் அல்லது உத்தரபிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டுள்ளனர்.[4]

சட்டமன்றப் பிரிவுகள்

[தொகு]

மேற்கு வங்காளத்தில் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக 2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின்படி, இந்த நாடாளுமன்றத் தொகுதி எண். 25 ஆகும். இத்தொகுதி பின்வரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது:[5]

எல்லை நிர்ணயத்திற்கு முன்பு, இந்தத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்தது:[6]

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
நாடாளுமன்றம்காலம்மக்களவை உறுப்பினர்கட்சி
முதலாவது1952-57சந்தோசு குமார் தத்தா[7] இந்திய தேசிய காங்கிரசு
இரண்டாவது1957-62முகமது எலியாசு[8][9] இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
மூன்றாவது1962-67
நான்காவது1967-71கே. கே. சட்டர்ஜி[10] இந்திய தேசிய காங்கிரசு
ஐந்தாவது1971-77சமர் முகர்ஜி[11][12][13] இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
ஆறாவது1977-80
ஏழாவது1980-84
எட்டாவது1984-89பிரியா ரஞ்சன் தாஸ்முன்சி[14] இந்திய தேசிய காங்கிரசு
ஒன்பாதவது1989-91சுசாந்தா சக்ரவர்த்தி[15][16] இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
பத்தாவது1991-96
பதினொன்றாவது1996-98பிரியா ரஞ்சன் தாஸ்முன்சி[17] இந்திய தேசிய காங்கிரசு
பன்னிரண்டாவது1998-99பிக்ரம் சர்க்கார்[18] அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
பதின்மூன்றாவது1999-04சுதேஷ் சக்ரவர்த்தி[19][20] இந்தியப் பொதுவுடமைக் கட்சி
பதினான்காவது2004-09
பதினைந்தாவது 2009-13அம்பிகா பானர்ச்சி[21] அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2013-14பிரசூன் பானர்ஜி[22][23][24]
பதினாறாவது2014-19
பதினேழாவது 2019-24
பதினெட்டாவது 2024-29

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: அவுரா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு பிரசூன் பானர்ஜி 626493 49.26 Increase2.08
பா.ஜ.க ரத்தின் சக்ரவர்த்தி 457,051 35.94 2.8
இபொக (மார்க்சிஸ்ட்) சப்யசாசி சாட்டர்ஜி 152,005 11.95
நோட்டா நோட்டா 10,000 0.79
வாக்கு வித்தியாசம் 50,000 3.9
பதிவான வாக்குகள்
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014". West Bengal. Election Commission of India. Archived from the original on 2 July 2014. Retrieved 2 June 2014.
  2. "Trinamul Congress wins Howrah Lok Sabha Polls". Hindustan Times, 5 June 2013. Retrieved 13 June 2014.
  3. "Sheffield of India dying an untimely death". The Times of India, 20 September 2001. Retrieved 13 June 2014.
  4. "Non-Bengali voters could prove crucial in final phase". The Hindu, 11 May 2014. Retrieved 13 June 2014.
  5. "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. Retrieved 2009-05-27.
  6. "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha" (PDF). Volume III Details For Assembly Segments Of Parliamentary Constituencies. Election Commission of India. Retrieved 2010-10-01.
  7. "General Elections, India, 1951- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Archived from the original (PDF) on 8 October 2014. Retrieved 25 May 2014.
  8. "General Elections, India, 1957- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Retrieved 25 May 2014.
  9. "General Elections, India, 1962- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Retrieved 25 May 2014.
  10. "General Elections, India, 1967 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 25 May 2014.
  11. "General Elections, India, 1971 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 25 May 2014.
  12. "General Elections, 1977 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 25 May 2014.
  13. "General Elections, 1980 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 25 May 2014.
  14. "General Elections, 1984 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 25 May 2014.
  15. "General Elections, 1989 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 25 May 2014.
  16. "General Elections, 1991 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 25 May 2014.
  17. "General Elections, 1996 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Retrieved 25 May 2014.
  18. "General Elections, 1998 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 25 May 2014.
  19. "General Elections, 1999 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 25 May 2014.
  20. "General Elections, 2004 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Retrieved 25 May 2014.
  21. "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 11 August 2014. Retrieved 25 May 2014.
  22. "Bye election to the House of the People from The 25 Howrah Parliamentary Constituency" (PDF). Forms 21 D & E. Election Commission of India. Retrieved 10 June 2013.
  23. "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Retrieved 19 June 2016.
  24. "Howrah Constituency Lok Sabha Election Result: Candidates Profiles, Map, Total Votes, Past Results | Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2024-04-11.

வெளியிணைப்புகள்

[தொகு]

Howrah lok sabha constituency election 2019 result details

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவுரா_மக்களவைத்_தொகுதி&oldid=4276355" இலிருந்து மீள்விக்கப்பட்டது