அவுதவின் தோல்பசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அவுதவின் தோல்பசு
Audouin Dollfus
பிறப்புநவம்பர் 12, 1924(1924-11-12)
இறப்புஅக்டோபர் 1, 2010(2010-10-01) (அகவை 85)
தேசியம்பிரெஞ்சியர்
துறைவானியல்
பணியிடங்கள்பாரீசு வான்காணகம்
கல்வி கற்ற இடங்கள்பாரீசு பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்பெர்னார்டு இலியோத்
அறியப்படுவதுஜேனசு நிலா கண்டுபிடிப்பாளர்

ஆதவின் சார்லசு தோல்பசு (Audouin Charles Dollfus) (நவம்பர் 12, 1924 – அக்தோபர் 1, 2010[1][2]) ஒரு பிரெஞ்சு வானியலாளரும் வான்வலவரும் ஆவார். இவர் சூரியக் குடும்ப ஆய்வின் வல்லுனரும் காரிக்கோளின் ஜேனசு நிலாவைக் கண்டுபிடித்தவர்.

வாழ்வும் பணியும்[தொகு]

இவர் பாரீசில் சார்லசு தோல்பசுவுக்குப் பிறந்தார்.

இவர் பாரீசு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று 1955 இல் புறநிலை (இயற்பியல்சார்) அறிவியல் புலங்களில் முனைவர் பட்டம் பெற்றார். 1946 இல் இருந்து தனது ஆசிரியரான பெர்னார்டு இலியோத் அவர்களைப் பின்பற்ரி மியூடன் வான்காணகத்தில் வானியலாலராகப் பணிபுரிந்தார். குறிப்பாக இங்கு சூரியக் குடும்ப இயற்பியல் ஆய்வுக்கு வழிகாட்டினார். இரக்கும் வரை இவர் பாரீசு வான்காணகத்தில் பணிபுரிந்தார். பெரும்பாலான இவரது ஆய்வுகள் பிக் து மிதி வான்காணகத்தில் எடுக்கப்பட்ட நோக்கிடுகளைச் சார்ந்தே அமைந்தன. இஅர் விரும்பிப் பயன்படுத்திய முறை, முனைவுற்ற ஓளியால் சூரியக் குடும்ப பொருள்களின் இயல்புகளைக் காணும் வழிமுறையே ஆகும். பொறுமையான தொடர்ந்த ஆய்வாலும் புதிய நோக்கீட்டு நுட்பங்களை உருவாக்கியும் இவர் பல குறிப்பிட்த் தகுந்த முடிவுகளை எய்தினார். இவர் சூரியக் குடும்பம் சார்ந்த 300 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

வைகிங் விண்கலம் செவ்வாயில் இறங்கும் முன்பு, செவ்வாய் மேற்பரப்பின் இயைபுகள் பற்றி பல விவாதங்கள் நிலவின. இவர் பல ஆயிரம் புவித்தரை கனிமங்களின்முனைவாக்க ஒளியி தோற்றங்களோடு ஒப்பிட்டு செவ்வாயின் பாலைநிலத்து மேற்பரப்பின் வேதி உள்ளடக்கக் கூறுகளை தீர்மானிக்க முயன்றார். இவர் செவ்வாயின் தோற்ரத்துக்கு தூள்நிலை இலிமோனைட் ஒத்துபோவதைக் கண்டார். எனவே, செவ்வாயின் தரை இரும்பு ஆக்சைடால் ஆனது என்ற முடிவுக்கு வந்தார். என்றாலும்,சிகாகோ பல்கலைக்கழகத்தின் மற்றொரு வானியலாளர் ஜெரார்டு குயூப்பர் இந்த முடிவை ஏற்கவில்லை. மாறாக அவர் இந்தத் தரவுகள் நுண்குறுணைக் கட்டமைப்புள்ள அனற்பாறைகளுக்குப் பொருந்துவதாக நம்பினார். ஆனால் பின்னர் செய்த ஆய்வுகள் தோல்பசுவின் நோக்கீடுகள் சரியே என்பதை நிறுவின.

முனைவாக்க ஒளியால் கோள்சூழ்ந்த அல்லது இயற்கைத் துணைக்கோளின் வளிமண்டலத்தையும் கண்டறிய முடியும்.பெரும்பான்மையான அறிவியலார் 1950 களில் அறிவன்(புதன்) கோள் மிகச் சிறிய கோளாகையால், புறவெளிக்கு மூலக்கூறு தப்பித்தல் அல்லது வெளியேற்றத்தால் தன் வளிமண்டலத்தை இழந்திருக்கும் என்றே கருதிவந்தனர். ஆனால் தோல்பசு பிரெஞ்சு பைரெனீசில் உள்ள பிக் து மிதி வானகாணகத்தில் மேற்கொண்ட முனைவாக்க ஓளி அளவீடுகளால் அறிவனில் சிறுவளிமண்டலம் இருப்பதை உறுதிபடுத்திக் கூறினார். இவரது கண்டுபிடிப்பு முந்தைய வளிம இயக்க்க் கோட்பாட்டுவழி முன்கணிப்புகளுக்கு முரணாக அமைந்தது. அறிவனின் வளிமண்டல அழுத்தம் 1 மிமீ இதள்கல உயரமாக உள்ளதென மதிப்பிட்டுக் கூறினார். வளிமண்டலத்தை நிரப்பும் வளிமத்தன்மை பற்றி ஏதும் அறிய இயலவில்லை என்றாலும் அது அடர்த்தி மிக்கதாக உள்ளது எனக் கூறினார், என்றாலும் அறிவன் வளிமண்டல அளவு புவியின் வளிமண்டலத்தில் 300 இல் ஒரு பங்காகவே இருக்கும் என்பது உறுதி. அண்மையில் அது மிகவும் மெல்லிதாக இருத்தல் அறியப்பட்டுள்ளது: அதாவது, 10−15 பார் மட்டுமே எனவும் அதன்மொத்தப் பொருண்மை 1000 கிகி ஆகவும் உள்ளது.

அறிவனில் பொலிவு மிக்க அடிப்பகுதி மட்டுமன்றி, இருண்ட வட்டாரங்களும் உள்ளன; இது முதலில் 1889 இல் ஜியோவன்னி சுசியாபரெல்லியால் நோக்கப்பட்டது. பிக் து மிதி வான்காணகத்தில் உள்ல ஒளிவிலக்கத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, இவர் 1959 இல் 300கிமீ அளவினும் சிறிய பரப்பை பிரித்து ஆய்வு செய்தார்.

இவர் நிலா வளிமண்டல ஆய்வையும் மேற்கொண்டார். நிலாவில் இருந்து விண்வெளிக்கு வெளியேறும் வளிம வீதம் மிக உயரளவில் அமைந்துள்ளதால், நிலாவில் வளிமண்டலம் ஏதும் இல்லை எனும் முடிவை எட்டினார். வளிமண்டலம் இருந்தால் அதை முனைவாக்க ஒளி ஆய்வு எளிதில் கண்டுபிடித்துவிடும்; பெர்னார்டு இலியோத்தும் பின்னர் தோல்பசுவும் நிலாவில் கண்டுபிடிக்க முடிந்த முனைவாக்க ஒளி இல்லாமையால், கோட்பாட்டியலாக நிலாவில் வளிமண்டலம் இல்லை என உறுதிபடுத்தினர்.இவர்1966 இல் காரிக்கோளின் உள்புற நிலாவாகிய ஜேனசு நிலாவைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பின் போது ஜேனசுவுக்கு அருகில் உள்ள இரு வலயங்களும் புவிக்கு விளிம்பாக அமைந்திருந்தன. எனவே அவை கண்ணுக்குப் புலப்படவில்லை. இதே நேரத்தில் ஜேனசின் வட்டணையைப் பகிரும் எபிமிதியசு நிலாவும்நோக்க்ந்ப்பட்டது. இவ்விரண்டையும் இவரால் பிரித்தறிய முடியவில்லை. எனவே இந்தக் கண்டுபிடிப்பு இரிச்சர்டு வாக்கர் கண்டுபிடித்த்தாகவே கொள்ளப்படுகிறது.

இவர் 1981 இல் உலகப் பண்பாட்டு மன்றத்தின் நிறுவல் உறுப்பினர் ஆனார்.[3]

காற்றுவெளி வளிமக்கலன் முன்னோடி[தொகு]

வானூர்தியியல் முன்னோடியாகிய தனது தந்தையார் சார்லசு தோல்பசுவுடன் இணைந்து, வளிமண்டல வெங்காற்று வளிமக்கலன் பறப்பில், அடுக்குக் கோளத்தில் பறத்தல் உட்பட, பல உலகச் சாதனைகளைப் பதிவு செய்துள்ளார். இவர்தான் முதன்முதலில், நம் வளிமண்டலத்தின் அடுக்குக்கோளத்தில் வானியல் நோக்கீடுகள் செய்து செவ்வாயை விரிவாக ஆய்வு செய்தார்

விருதுகளும் தகைமைகளும்[தொகு]

குறுங்கோள் 2451 தோல்பசு இவர் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவர் 1979 முதல் 1981 வரை பிரெஞ்சு வானியல் கழகத்தின் தலைவராக விளங்கினார்.[4]

இவருக்கு 1993 இல் பிரெஞ்சு வானியல் கழகத்தின் பிரிக்சு யூல்சு ஜான்சென் விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவுதவின்_தோல்பசு&oldid=2714689" இருந்து மீள்விக்கப்பட்டது