அவுண்டா நாகநாத்
Appearance
அவுண்டா நாகநாத்
அவுண்டா | |
---|---|
பெரிய கிராமம் | |
ஆள்கூறுகள்: 19°32′04″N 77°02′22″E / 19.534554°N 77.039566°E | |
நாடு | இந்தியா இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | ஹிங்கோலி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 14,801 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 431705 |
வாகனப் பதிவு | MH 38 |
அருகமைந்த நகரங்கள் | ஹிங்கோலி (26 கிமீ), பர்பானி(45 கிமீ) |
மக்களவைத் தொகுதி | ஹிங்கோலி |
சட்டமன்றத் தொகுதி | பஸ்மத் |
அவுண்டா நாகநாத் (Aundha Naganath), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ஹிங்கோலி மாவட்டத்தில் அமைந்த நகரம் ஆகும். அவுண்டா நாகநாத் நகரத்தின் வெளிப்புறத்தில் உள்ள காட்டில் 12 சோதிர் லிங்கத் தலங்களில் எட்டாவதான அவுண்டா நாகநாதர் கோயில் உள்ளது.
புவியியல்
[தொகு]- அவுண்டா நாகநாத், தக்காணப் பீடபூமியில் மரத்வாடா பகுதியில் அமைந்துள்ளது.
- அவுண்டா ஏரி இந்நகரத்தின் நீர் ஆதரமாக உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]- 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 2744 குடியிருப்புகள் கொண்ட அவுண்டா நாகநாத் நகரத்தின் மக்கள் தொகை 14,801 ஆகும். அதில் ஆண்கள் 7,515 மற்றும் பெண்கள் 7286 ஆகவுள்ளனர்.
- பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 970 பெண்கள் வீதம் உள்ளனர்.
- சராசரி எழுத்தறிவு 82.33% ஆக உள்ளது.
- பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 15.57% மற்றும் 2.70% ஆகவுள்ளனர்.[1]