அவுட்லுக்.கொம்
இந்த article காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த article தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். (மார்ச் 2017) |
![]() | |
வலைத்தள வகை | Webmail, contacts, tasks, and calendaring |
---|---|
உரிமையாளர் | மைக்ரோசாப்ட் |
வணிக நோக்கம் | Yes |
பதிவு செய்தல் | Required |
பயனர்கள் | 400 million[1] |
உள்ளடக்க உரிமம் | Proprietary |
வெளியீடு | சூலை 4, 1996 சூலை 31, 2012 (as Outlook.com) | (as Hotmail)
அலெக்சா நிலை | ![]() |
தற்போதைய நிலை | Online |
உரலி | outlook |
ஹொட்மெயில் (Hotmail) என்பது வலைத்தளத்தை அடிப்படையாகக்கொண்ட மின்னஞ்சல் சேவையாகும். இவ்வாறாக வலைத்தளத்தை அடிப்படையாகக்கொண்டு, வலை உலாவி மூலம் பயன்படுத்தக்கூடியதாக உருவான உலகின் முதல் மின்னஞ்சல் சேவையும் இதுவேயாகும். இதன் பிரதான போட்டியாளர்களாக ஜிமெயில், யாகூ மின்னஞ்சல், en:AIM Mail ஆகியவை விளங்குகின்றன. வரவிருக்கும் வின்டோஸ் லைவ் மெயில் விண்டோஸ் லைவ் மெயில் வெளிவந்தும் இதை மாற்றீடுசெய்யும் என எதிர் பார்க்கப் படுகின்றது.
வரலாறு[தொகு]
ஹொட்மெயில் ஆனது 1995 ஆம் ஆண்டு இந்தியா சண்டிகாரைச் சேர்ந்த சமீர் பாத்தியா மற்றும் அமெரிக்கரான ஜக் ஸ்மித் en:Jack Smith (Hotmail) ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. இது வர்த்தக ரீதியாக அமெரிக்கா வின் சுதந்திரதினமான 4 ஜீலை 1996 ஆம் ஆண்டு இணைய சேவை வழங்குனர்களிடமிருந்து சுதந்திரம் என்னும் தொனியில் வெளியிட்டார்கள். நிறுவனங்களின் பாதுகாப்புச் சுவர்கள் பொதுவான மின்னஞ்சலைத் தடுத்துவருவதால் ஜக் ஸ்மித் முதலில் இணையமூடான மின்னஞ்சலைப் பெறவேண்டும் என்கின்ற திட்டத்தைக் கொண்டிருந்தார். சபீர் பாத்தியா வர்த்தகத் திட்டத்தை முன்வைத்த போது "-mail" இல் முடிவடையும் எல்லாச் சொற்களையும் தேடியபோது ஹொட்மெயில் (Hotmail) என்பது தேர்ந்தெடுக்கப் பட்டது. ஏனெனில் Hotmail இல் HTML எனும் சொல்லானது HoTMaiL இல் உள்ளதாகும். ஏனெனில் இந்த HTML இணையப் பக்களின் அடிப்படையாகும்.
1997 ஆம் ஆண்டில் 8.7 மில்லியன் பயனர்களைக் கொண்டிருந்த இம்மின்னஞ்சலானது மைக்ரோசாப்ட் இற்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கு கைமாற்றப் பட்டது. அதன் பின்னர் 'மைக்றோஸாப்ட் வலையமைப்பின் en:MSN கீழ் கொண்டுவரப்பட்டது.
பெப்ரவரி 1999 இல் ஹொட்மெயிலானது 30 மில்லியன் பயனர்களைக் கொண்டிருந்தது. ஹொட்மெயில் பல நாடுகளிலும் 17 மொழிகளிலும் அதன் சேவையை வழங்கி வருகின்றது. இன்றும் ஓர் மிகப் பெரிய மின்னஞ்சல் சேவை வழங்குனாரகவேயுள்ளனர். ஜூலை 2005 இல் நடத்தப் பட்ட ஆய்வுகள் மூலம் 35.5% வீதமானவர்கள் ஹொட்மெயிலைப் பயன் படுத்துவதாகத் தெரியவந்துள்ளது. இது இன்று மைக்ரோசாப்ட் இன் ஓர் கிளையாக உள்ளபோதும் இதன் அபிவிருத்தி நிலையமானது சிலிக்கன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
சேமிப்பு அளவு[தொகு]
ஹொட்மெயிலானது அமெரிக்கா, பிரேசில், கனடா, ஐக்கிய இராச்சியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளவர்களிற்கு 250 MB அளவான இடவசதியை அளிக்கின்றனர் (எனினும் இணைக்கப் பட்ட கோப்பின் அளவானது 10 MB ஐ விடக் குறைவாகவே இருக்கவேண்டும்). இந்த அளவு அதிகரிப்பானது கூகிளின் ஜிமெயிலைத் தொடர்ந்து ஏற்பட்டதாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் 2 MB என்ற மிகக் குறைவான சேமிப்பு அளவையே தருவதால் இம் மின்னஞ்சல் சேவையானது இந்நாடுகளில் பிரபலத்தை இழந்து வருகின்றது.
POP3 முறையில் மின்னஞ்சலைப் பெறுதல்[தொகு]
மைக்ரோசாப்ட் இற்கே உரிய வெப்டாவ் அணுகு முறைமூலம் மைக்றோஸாப்ட் அவுட்லுக்' மைக்றோஸாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் இல் ஹொட்மெயிலைப் பெற்றுக்கொள்ளலாம் எனினும் இம்முறையில் வழங்கி அல்லது சேவரிலும் மின்னஞ்சல் இருக்கும். இம்முறையில் நீங்கள் இங்கு செய்யும் மாற்றங்கள் அங்கும் அங்கே ஏற்ப்டும் மாற்றங்கள் இங்கும் ஏற்படுத்த்ப் படும்.
POP3 முறையில் மின்னஞ்சலைப் பெற்றுக் கொள்ள en:FreePOPs அல்லது ஹொட்மெயில் பொப்பர் போன்ற மென்பொருட்கள் மூலம் உங்களிற்கு விரும்பிய எந்தவொரு மின்னஞ்சல் மென்பொருளிலும் உங்கள் மின்னஞ்சலைப் பெற்றுக் கொள்ளலாம்.
வேறு தகவல்கள்[தொகு]
இலவச ஹொட்மெயில் மின்னஞ்சல் சேவையானது 30 நாட்கள் பயன்படுத்தாவிட்டல் அப்பயனர் கணக்கில் உள்ள முகவரிகள் தவர்ந்த ஏனைய செய்திகள் யாவும் அழிக்கப் பட்டு பயனர் கணக்கானது தற்காலிகமாகத் துண்டிக்கப் படும். எனினும் மைக்ரோசாப்ட் பாஸ்போட் கணக்கானது 90 நாட்கள் வரை பேணப் படும்.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Outlook.com Launch
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "Outlook.com Site Info". அலெக்சா இணையம். மார்ச் 21, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. December 30, 2016 அன்று பார்க்கப்பட்டது.