அவிவா இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவிவா இந்தியா
வகைகூட்டு முயற்சி
நிறுவுகை2002
தலைமையகம்குருகிராம், அரியானா[1]
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முதன்மை நபர்கள்திரு.ட்ரெவர் புல் (நிர்வாக இயக்குநர் & தலைமை நிர்வாக அதிகாரி)
தொழில்துறைநிதிச் சேவைகள்
சேவைகள்
  • ஆயுள் காப்பீடு
  • மருத்துவ காப்பீடு
  • முதலீட்டு மேலாண்மை
  • பரஸ்பர நிதி
  • ஓய்வூதியம்
தாய் நிறுவனம்அவிவா பி.எல்.சி
டாபர்
இணையத்தளம்Aviva India

அவிவா இந்தியா (Aviva India) ஒரு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், இங்கிலாந்து ஆயுள் காப்பீட்டு நிறுவனமான அவிவா பி.எல்.சி மற்றும் இந்திய கூட்டு நிறுவனமான டாபர் குழுமம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்.அவிவா சூலை 2002 இல் இந்தியாவின் பழமையான வணிக நிறுவனங்களில் ஒன்றான டாபர் குழுமத்துடன் ஒரு கூட்டு முயற்சியாக செயல்பட தொடங்கியது.இந்திய காப்பீட்டுத் துறை விதிகளின்படி,அவிவா பி.எல்.சிக்கு 49% பங்குகளும்,டாபர்க்கு ஜே.வி கூட்டணியில் 51% பங்குகளும் உள்ளன.

செயல்பாடுகள்[தொகு]

அவிவா சமீபத்திய ஆண்டுகளில் ஆன்லைன் இயங்குதளத்தில் கவனம் செலுத்தி வருகிறது,மேலும் அவிவா ஐ−லைப்,அவிவா உடல்நலம் காத்தல் உள்ளிட்ட பல தயாரிப்புகள்,வாடிக்கையாளர்களுக்கு புரிந்துகொள்வதற்க்கும் வாங்குவதற்க்கும் எளிதாக புதிய வடிவங்கள் மற்றும் தயாரிப்புகளில் கவனம் செலுத்துகிறது.

தயாரிப்புகள்[தொகு]

நவீன முறையில் பொருள்கள் தயாரிப்பு மற்றும் இலாபக் கொள்கைகள் அறிமுகப்படுத்திய நிறுவனங்களின் பட்டியலில் அவிவா இந்தியாவும் இருந்தது.அதன் தயாரிப்புகளில் நிலையான கால பாதுகாப்பு திட்டங்கள் (அவிவா லைஃப்சில்ட் பிளாட்டிம்) மற்றும் ஒற்றை பிரீமியம் திட்டங்கள்.

கூட்டாண்மை சமூக பொறுப்பு[தொகு]

அவிவா இந்தியா ஒவ்வொறு ஆண்டும் பல்வேறு நகரங்களில் அவிவா பெரிய கவ்விச் சுவரை நடத்துகிறது,இந்த திட்டத்தின் முலம் வரிய குழந்தைகளுக்கான புத்தகங்களை சேகரிக்கிறது.கடந்த மூன்று ஆண்டுகளில்,அவிவா பெரிய கல்விச் சுவர் 2 மில்லியனுக்கு அதிகமான புத்தகங்களை சேகரித்துள்ளது.அவை நாடு முழுவதும் 500,000க்கும் மேற்பட்ட வறிய குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவிவா பெரிய கல்விச் சுவர் 2011 இல் மட்டும் 1.1 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்களை சேகரிதத்து.இது அந்த ஆண்டிற்கான "புத்தகங்களின் மிகபெரிய சுவர்" என்று லிம்கா சாதனை புத்தகத்தில் பதிவு செய்தது.இது குழந்தை உரிமை சாம்பியன் விருது,வெண்கல விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளது.லண்டனின் பாஃப்டா,2012 இல் இந்தியா பி.ஆர்& கார்ப்பரேட் விருதுகளை பெற்றுள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. "Contact Us". Aviva India. Archived from the original on 12 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-12-28. {{cite web}}: Check date values in: |archivedate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிவா_இந்தியா&oldid=3915052" இலிருந்து மீள்விக்கப்பட்டது