அவார்டு அயிக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அவார்டு ஆத்தவே அயிக்கன்
Aiken.jpeg
அவார்டு அயிக்கன்
பிறப்பு மார்ச்சு 8, 1900(1900-03-08)
ஒபோக்கன், நியூ செர்சி
இறப்பு மார்ச்சு 14, 1973(1973-03-14) (அகவை 73)
செயின்ட் லூயிஸ், மிசூரி
வாழிடம் ஐக்கிய அமெரிக்கா
குடியுரிமை அமெரிக்கர்
துறை கணினியியல்
பணியிடங்கள் ஆர்வர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள் விஸ்கொன்சின் பல்கலைக்கழகம்
ஆர்வர்டு பல்கலைக்கழகம் (கலாநிதிப் பட்டம்)
அறியப்படுவது தன்னியக்கத் தொடர்க் கட்டுப்பாட்டுக் கணிப்பான்
விருதுகள் ஆரி எச். கூடு நினைவு விருது (1964)
எடிசன் பதக்கம் (1970)

அவார்டு ஆத்தவே அயிக்கன் (Howard Hathaway Aiken, மார்ச் 8 1900 - மார்ச் 14, 1973) என்பவர் ஒரு கணினியியல் அறிவியலாளர்.[1] தன்னியக்கத் தொடர்க் கட்டுப்பாட்டுக் கணிப்பானைக் கண்டுபிடித்தவர் இவரே.[2]

அயிக்கன் விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார்.[3] பின்னர், கலாநிதிப் பட்டத்தை 1939ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[4]

தனிப்பட்ட வாழ்வு[தொகு]

ஹவார்ட் அயிக்கன் 1900ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி பிறந்தார்.[5]

இவர் மூன்று தடவைகள் திருமணம் செய்தார். முதலாவதாக லூசி மன்சிலையும் இரண்டாவதாக ஆக்னஸ் மோண்ட்கோமரியையும் மூன்றாவதாக மேரி மெக்ஃபார்லேண்டையும் திருமணம் செய்தார். இவருக்கு ரேச்சல் ஆன், எலிசபெத் என இரு பிள்ளைகள்.

அயிக்கன் ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை சம்பந்தமான நிறுவனமொன்றிலும் வேலை செய்தார்.[6]

பின்னர், செயின்ட் லூயிசிற்கு ஒரு சுற்றுலாவுக்காகச் செல்லும்போது மரணமடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவார்டு_அயிக்கன்&oldid=2207457" இருந்து மீள்விக்கப்பட்டது