அவாகர்

ஆள்கூறுகள்: 27°27′26″N 78°29′14″E / 27.45722°N 78.48722°E / 27.45722; 78.48722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவாகர்
अवागढ़
பேரூர்
அடைபெயர்(கள்): அவா
அவாகர் is located in உத்தரப் பிரதேசம்
அவாகர்
அவாகர்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அவாகர் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°27′26″N 78°29′14″E / 27.45722°N 78.48722°E / 27.45722; 78.48722
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஏட்டா
நிறுவப்பட்ட ஆண்டு12-ஆம் நூற்றாண்டு
தோற்றுவித்தவர்இராஜா பல்வந்த் சிங்
அரசு
 • வகைபேரூராட்சி
 • நிர்வாகம்அவாகர் பேரூராட்சி
பரப்பளவு
 • மொத்தம்6 km2 (2 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்10,983
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்207301
வாகனப் பதிவுUP-82

அவாகர் (Awagarh), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஏட்டா மாவட்டத்தில் அமைந்த நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும்.[1] மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு மேற்கே 315 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாவட்டத் தலைமையிட நகரான ஏட்டாவிற்கு தென்மேற்கே 23.2 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஆக்ராவிற்கு வடகிழக்கே 64 கிலோ மீட்டர் தொலைவிலும் அவாகர் நகரம் உள்ளது. அவாகர் தொடருந்து நிலையம் ஒரு நடைமேடையுடன் உள்ளது.[2]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 11 வார்டுகளும், 1,913 வீடுகளும் கொண்ட அவாகர் நகரத்தின் மக்கள் தொகை 10,983 ஆகும். அதில் ஆண்கள் 5,708 மற்றும் பெண்கள் 5,275 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 853 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1499 (13.65 %) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 82.02% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 81.37%, இசுலாமியர் 10.59%, சமணர்கள் 7.54% மற்றும் பிறர் 0.50% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "History of Etah | District Etah , Government of Uttarpradesh" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
  2. Awagarh Raliway Station
  3. {https://www.census2011.co.in/data/town/801266-awagarh-uttar-pradesh.html Awagarh Population Census 2011]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவாகர்&oldid=3527916" இலிருந்து மீள்விக்கப்பட்டது