அவளும் நானும் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அவளும் நானும்
அவளும் நானும் (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகைகுடும்பம்
நாடகம்
எழுதியவர்குமரன்
இயக்குனர்தனுஷ்
நடிப்பு
 • மௌனிகா தேவி
 • அம்ருத்
 • தரிஷ்
 • ஸ்ரீ மஹாதேவ்
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்மொழி
எபிசோடுகள் எண்ணிக்கை380
தயாரிப்பு
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
சேனல்விஜய் டிவி
ஒளிபரப்பான காலம்26 பெப்ரவரி 2018 (2018-02-26) –
22 சூன் 2019 (2019-06-22)

அவளும் நானும் விஜய் டிவியில் பெப்ரவரி 26ம் தேதி 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி, டிசம்பர் 3ஆம் திகதி முதல் மதியம் 12:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. ஜனவரி 7, 2019 முதல் பழைய நேரமான 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி ஜூன் 22, 2019ஆம் ஆண்டு அன்று 380 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.

இது ஒரு இரட்டை சகோதரிகளை பற்றிய மெகா தொடர். இந்த தொடர் அசாமிய மொழி தொடரான அர்தங்கினி என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்தத் தொடரை இயக்குனர் தனுஷ் இயக்கியுள்ளார், நடிகை மௌனிகா இந்தத் தொடரில் இரட்டை சகோதரிகளாக நிலா மற்றும் தியாவாக நடித்துள்ளார், இதுவே இவரின் முதல் தொலைக்காட்சி தொடரும் ஆகும். இந்த தொடரில் நாயகனாக அம்ருத் மற்றும் ஸ்ரீ மஹாதேவ் நடித்துள்ளார்கள், இவர்களுடன் தரிஷ், கண்ணன், ஸ்ரீ லதா, ஷியாம் கோபால் ஆகியோரும் நடித்து உள்ளார்கள்.[1][2][3][4][5][6]

கதைச்சுருக்கம்[தொகு]

இரண்டை சகோதரிகளான நிலாமற்றும் தியா. பணக்கார வீட்டுப் பையனான பிரவீனுடன் நிலாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால், நிலாவோ விஜய் என்ற பையனைக் காதலிக்கிறார். ஆனால், பெற்றோரிடம் சம்மதம் கிடைக்கவில்லை.

எனவே, திருமணத்துக்கு முன்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போகிறார் நிலா. குடும்பப் பெயரைக் காப்பாற்றுவதற்காக, தியாவை நிலா என்று சொல்லி பிரவீனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். பெற்றோரை விட்டுப் பிரிந்து காதலனுடன் சென்ற நிலாவின் கணவன் ஒரு விபத்தில் இருக்கின்றான். இதன் பிறகு நிலா பெயரில் செல்லும் தியாவின் வாழ்க்கை என்னவாகப் போகிறது? என்பதுதான் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • மௌனிகா தேவி - தியா பிரவீன் / நிலா விஜய்
 • அம்ருத் - பிரவீன்
 • ஸ்ரீ மஹாதேவ் - விஜய் (பகுதி: 1-34)
 • தரிஷ் - அரவிந்த்
 • தினேஷ் சிவா - ஷாம்
தியா / நிலா குடுமபம்
 • கண்ணன் - சத்யமூர்த்தி
 • ஸ்ரீ லதா - காயத்ரி சத்யமூர்த்தி
பிரவீன் குடுமபம்
 • ஷியாம் கோபால் - ராஜேந்திரன்
 • கிரு பாஜி - பார்வதி ராஜேந்திரன்
 • ரேஷ்மா ரெசு - சுவேதா (பிரவினின் அக்கா)
 • தர்ஷ குப்தா - மானசா
 • சந்தோஷ் - தினேஷ்

துணை கதாபாத்திரம்[தொகு]

 • கவிதா சோலைராஜன் -கவிதா பிரபாகர்
 • நீலகண்டன் - பிரபாகர்
 • சத்யப்ரியா - பானுமதி
 • சஞ்சய் சரவணன் - வசந்த்
 • குரு ஹாவ்க்மன் - ரவி சங்கர்
 • பானு பாரதிவாஜ் - மாதவி ரவி சங்கர்
 • பாலசுப்பிரமணி

இவற்றை பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]