அவல்பூந்துறை அம்மணீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு அம்மணீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவிடம்:அவல்பூந்துறை, ஈரோடு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மொடக்குறிச்சி
மக்களவைத் தொகுதி:ஈரோடு
கோயில் தகவல்
மூலவர்:அம்மணீஸ்வரர்
சிறப்புத் திருவிழாக்கள்:பவுர்ணமி பூசை
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட கட்டிட கலை
கோயில்களின் எண்ணிக்கை:1
கல்வெட்டுகள்:1
வரலாறு
கட்டிய நாள்:பண்ணிரண்டாம் நூற்றாண்டு

அவல்பூந்துறை அம்மணீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் 12 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட திகம்பர சமண கோவில். முற்றிலும் செங்கல் மற்றும் சுன்னாம்பை கொண்டு திராவிட கட்டிட கலையில் கட்டப்பட்ட கோயில். மூலவர் பார்ஸ்வநாதர், இவர் சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரர் ஆவார். இவரது சின்னம் 5 அல்லது 7 தலைகள் கொண்ட நாகம் ஆகும். இவரது இடது புறம் யக்ஷ்மி பத்மாவதி அம்மனின் சிலை உள்ளது. பத்மாவதி அம்மன் பார்ஸ்வநாதாரின் காவல் தெய்வம் ஆவார். இவரது கணவரான தர்னேந்திரறும் பாஸ்வநாதாரின் ஆண் காவல் தெய்வம் ஆவார். இக்கோயிலின் மூலவரின் வலது புறம் தருனேந்திரரின் நாகப்பாம்பு வடிவிலான சிலையும், அடுத்து ப்ரம்மா யக்சரின் உருண்டை வடிவிலான சிலையும், மூன்றாவதாக விநாயகர் சிலை ஒன்றும் உள்ளது.கோயிலின் வெளியே மூலவருக்கு நேர் எதிரில் பலிபீடம் உள்ளது. இந்த பலிபீடத்தில் தாமரை வடிவிலான வட்ட வடிவிலான பீடம் ஒன்றும், வட்ட வடிவிலான ஆனால் அடிப்பாகம் சதுரமாக காணப்படுகிறது. இக் கோயிலை அருகிலேயே வசித்து வரும் திகம்பர சமண குடும்பம் 7 தலைமுறைகளாக பூசை செய்தும், பராமரித்தும் வருகின்றனர்.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)