அவலாஞ்சி ஏரி, உதகமண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அவலாஞ்சி ஏரி, உதகமண்டலம்
அமைவிடம்தமிழ்நாடு, நீலகிரி மாவட்டம்
ஆள்கூறுகள்11°19′19″N 76°36′40″E / 11.322°N 76.611°E / 11.322; 76.611ஆள்கூறுகள்: 11°19′19″N 76°36′40″E / 11.322°N 76.611°E / 11.322; 76.611
உறைவுஇல்லை
Islandsஇல்லை

அவலாஞ்சி ஏரி (Avalanche Lake) தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஏரியாகும்.[1][2]

சொற்பிறப்பு[தொகு]

இந்த ஏரி உள்ளபகுதியில் 1800 களில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பனிச்சரிவு என்னும் பொருளுள்ள அவலாஞ்சி (avalanche) என்ற பெயர் உண்டானது.[1]

சுற்றுலா[தொகு]

Mountain-top view of the Avalanche Lake
மலை உச்சியில் இருந்து அவலாஞ்சி ஏரியின் தோற்றம்

அவலாஞ்சி ஏரி நீலகிரி மாவட்டத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா தலமாக உள்ளது.[3] இந்த ஏரியைச் சுற்றி வளைந்த பாதைகளும், மெக்னொலியாஸ், மல்லிகை, ரோடோண்ட்ரோன்ஸ் போன்ற பூக்கள் பூக்கும் தாவரங்களுடன் இயற்கை சூழ்ந்த சூழலின் உள்ளது. சுற்றுலா பயணிகள் இந்த ஏரியை சுற்றி முறுக்கு பாதைகள் வழியாக ஏரி அருகில் பயணிக்கலாம்.[1] ஏரிக்கு சென்று சுற்றுலா பயணிகள் தாங்களே தூண்டில் கொண்டு மீன்பிடித்தலில் ஈடுபடலாம் .[4] ஏரிக்கு அருகில் ஒரு மீன் குஞ்சுப்பொரிப்பகம் நிறுவப்பட்டுள்ளது. பயணிகள் இங்கு மீன்பிடி தூண்டில்கள் மற்றும் மீன் மீன்பிடிக்கத் தேவையான மற்ற மீன்பிடி சாதனங்களைப் பெற முடியும்.[5] ஏரிக்கு அருகில் உள்ள இடத்தில் சுற்றுலாப் பயணிகள் சிலர் கூடாரம்போட்டு தங்குகின்றனர். மேலும் சில சுற்றுலாப் பயணிகள் ஏரியின் எதிர்பக்கத்தில் மேகம் தவழும் மலைமீது மலை ஏற்றத்தில் ஈடுபடுகின்றனர்.[6] அதாவது அப்பர் பவானி போன்ற அடர்ந்த காட்டுப் பகுதிகளில் மனித நடமாட்டமற்ற பகுதிகளுக்குச் செல்கின்றனர்.[5]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Shaji, K A (Feb 18, 2011). "Flowers in the window". The Times of India. http://articles.timesofindia.indiatimes.com/2011-02-18/coimbatore/28614578_1_forest-orchids-meadows. பார்த்த நாள்: Sep 30, 2011. 
  2. "Avalanche Lake". traveldest.org. பார்த்த நாள் 2011-09-30.
  3. Ayub, Akber (May 29, 2011). "Footloose in the Nilgiris". The Hindu. http://www.hindu.com/mag/2011/05/29/stories/2011052950300800.htm. பார்த்த நாள்: Sep 30, 2011. 
  4. "Fishing in the Nilgiris". tamilnadutourism.org. பார்த்த நாள் 2011-09-30.
  5. 5.0 5.1 "Peaks of pleasure". Daily News and Analysis. Dec 6, 2007. http://www.dnaindia.com/entertainment/report_peaks-of-pleasure_1137638. பார்த்த நாள்: Sep 30, 2011. 
  6. Cycil, Chandrika (May 18, 2002). "Adventure: Avalanche". The Hindu. http://www.hindu.com/thehindu/yw/2002/05/18/stories/2002051800060200.htm. பார்த்த நாள்: Sep 30, 2011.