அவமானத்தின் நூற்றாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்கிய நாடுகள் சீனாவைத் தங்களுக்கெனப் பிரிக்கத் திட்டமிடுதல்; ஐக்கிய அமெரிக்கா, செருமனி, இத்தாலி, ஐக்கிய இராச்சியம், பிரான்சு, உருசியா மற்றும் ஆத்திரியா ஆகிய நாடுகள் இரண்டாம் வில்கெல்ம், முதலாம் உம்பெர்ட்டோ, யோவான் புல், முதலாம் பிரான்சு யோசப்பு (பிற்பகுதியில்), சாம் மாமா, இரண்டாம் நிக்கோலசு மற்றும் எமில் லவுபெட் ஆகியோரால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றன.
விக்டோரியா (பிரிட்டன்), இரண்டாம் கெயிசர் வில்கெல்ம் (செருமனி), சார் இரண்டாம் நிக்கோலசு (உருசியா), மரியன் (பிரான்ஸ்) மற்றும் ஒரு சாமுராய் (யப்பான்) ஆகியோர் சீனாவைப் பிரிப்பதைச் சித்தரிக்கும் ஒரு அரசியல் சித்திரம்.

அவமானத்தின் நூற்றாண்டு (சீனம்: 百年耻辱), அல்லது நூறு ஆண்டு கால தேசிய அவமானம், எனும் பதமானது சீனாவில் சீனப் பேரரசை மேற்கத்திய நாடுகள், உருசியா மற்றும் யப்பான் ஆகியவை 1839 முதல் 1949 வரையான காலகட்டத்தில் இடையிட்டு அடிபணிய வைத்ததை விளக்கப் பயன்படுத்தப்படுவதாகும்.[1]

இந்தப் பதமானது 1915 ஆம் ஆண்டு தோன்றியது. யப்பானிய அரசாங்கம் விதித்த இருபத்தொரு நிபந்தனைகளை யுவான் ஷிக்காய் ஒப்புக் கொண்டதை எதிர்த்து, சீன தேசியவாதம் வளர்ந்து கொண்டிருந்த சூழ்நிலையில் தோன்றியது. குவோமின்டாங் மற்றும் சீனப் பொதுவுடமைக் கட்சி ஆகியவை இந்தத் தன்மையைப் பிரபலப்படுத்தின.

வரலாறு[தொகு]

அவமானத்தின் நூற்றாண்டின் தொடக்கமானது பொதுவாக 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அந்த நேரத்தில்தான் முதலாம் அபினிப் போர் நடந்தது.[2] சீனர்கள் பலர் அபினிக்கு அடிமையாயினர்.[3]

அவமானத்தின் நூற்றாண்டின் ஒரு பகுதியாக அயல்நாட்டு சக்திகளிடம் தோல்வியடைந்த கீழ்க்கண்ட நிகழ்வுகள் குறிப்பிடப்படுகின்றன:

 • பிரிட்டனிடம் முதலாம் அபினிப் போரில் (1839–1842) தோல்வி அடைந்தது
 • சமமற்ற ஒப்பந்தங்கள் (குறிப்பாக நான்கிங், வம்போவா, அய்குன் மற்றும் சிமோனோசேகி ஒப்பந்தங்கள்)
 • இரண்டாம் அபினிப் போரில் (1856–1860) தோல்வியடைதல். பழைய கோடைகால அரண்மனையைப் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு படைகள் சூறையாடுதல்.
 • சீன-பிரெஞ்சுப் போர் (1884–1885)
 • ஜப்பானிடம் முதலாம் சீன-ஜப்பானியப் போரில் (1894–1895) தோல்வியடைதல்.
 • பாக்சர் கலகத்தை (1899–1901) 8 நாடுகளின் கூட்டணியானது ஒடுக்குதல்.[4]
 • திபெத்திற்கு சென்ற பிரிட்டனின் ராணுவ பயணம் (1903–1904)[5]
 • ஜப்பானின் 21 நிபந்தனைகள் (1915)
 • ஜப்பானின் மஞ்சூரியப் படையெடுப்பு (1931-1932)
 • இரண்டாம் சீன ஜப்பானியப் போர் (1937–1945)

இந்த காலகட்டத்தில் சீனா உள்புறமாக பெரிய அளவுக்கு சிதைந்தது. அது பங்குகொண்ட கிட்டத்தட்ட அனைத்து போர்களிலும் தோற்றது. அடிக்கடி பெரிய நாடுகளுடன் சமமற்ற ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டது.[6] பல சமயங்களில் பெரிய தொகைகளை போர் இழப்பீடாக வழங்க சீனா கட்டாயப்படுத்தப்பட்டது. தனது துறைமுகங்களை வணிகத்திற்கு திறப்பதற்கும் தனது பகுதிகளை (உதாரணமாக வெளி மஞ்சூரியா மற்றும் வெளி வடமேற்கு சீனாவின் பகுதிகளை உருசிய பேரரசுக்கும், ஜியோசோவு விரிகுடாவை ஜெர்மனிக்கும், ஹாங்காங்கை கிரேட் பிரிட்டனுக்கும், சஞ்சியாங்கை பிரான்சுக்கும் மற்றும், தாய்வான் மற்றும் தலியன் ஆகிய பகுதிகளை ஜப்பானுக்கும்) குத்தகைக்கோ அல்லது மற்ற நாடுகளிடமும் விட்டுவிடவோ கட்டாயப்படுத்தப்பட்டது. ராணுவ தோல்விகளுக்குப் பிறகு தனது இறையாண்மையில் பல்வேறு பிற சலுகைகளை அயல்நாட்டு சக்திகளின் செல்வாக்கிற்குள் வருமாறு ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.

உசாத்துணை[தொகு]

 1. Adcock Kaufman, Alison (2010). "The "Century of Humiliation," Then and Now: Chinese Perceptions of the International Order". Pacific Focus 25 (1): 1–33. doi:10.1111/j.1976-5118.2010.01039.x. 
 2. Paul A Cohen (2003). China Unbound. London: Routledge. பக். 148. https://archive.org/details/chinaunboundevol0000cohe. 
 3. Chang, Maria Hsia (2001). Return of the dragon: China'z wounded nationalism. Westview Press. பக். 69–70. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8133-3856-9. https://books.google.com/books?id=KYmiafRQP10C&pg=PA69. [தொடர்பிழந்த இணைப்பு]
 4. Gries, Peter Hays (2004). China's New Nationalism: Pride, Politics, and Diplomacy. University of California Press. பக். 43–49. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-93194-7. https://archive.org/details/chinasnewnationa0000grie/page/43. 
 5. "China Seizes on a Dark Chapter for Tibet", by Edward Wong, The New York Times, August 9, 2010 (August 10, 2010 p. A6 of NY ed.). Retrieved 2010-08-10.
 6. Nike, Lan (2003-11-20). "Poisoned path to openness". Shanghai Star இம் மூலத்தில் இருந்து 2010-03-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100323033925/http://app1.chinadaily.com.cn/star/2003/1120/cu18-1.html. பார்த்த நாள்: 2010-08-14. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவமானத்தின்_நூற்றாண்டு&oldid=3644297" இலிருந்து மீள்விக்கப்பட்டது