அவனி பிரசாந்து
| அவனி பிரசாந்து Avani Prashanth | |
|---|---|
| — குழிப்பந்தாட்டக்காரர் — | |
| தனிப்பட்ட தகவல்கள் | |
| பிறப்பு | 7 அக்டோபர் 2006 |
| வசிப்பிடம் | பெங்களூர், இந்தியா |
| பணிவாழ்வு | |
| தகுநிலை | தொழில்சாரா |
| தொழில்முறை வெற்றிகள் | 3 |
அவனி பிரசாந்து (Avani Prashanth) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொழுதுபோக்கு குழிப்பந்தாட்ட வீராங்கனையாவார். 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2023 ஆம் ஆண்டு சீனாவின் காங்சூ நகரத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இவர் ஓர் இளம் வீரராக இடம்பெற்றிருந்தார். அவனி பிரசாந்து அகசுட்டா தேசியப் பெண்கள் தொழில்சாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் முதல் பொழுதுபோக்கு வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.[1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]அவனி பிரசாந்து பெங்களூரில் பிறந்தார். இவரின் தந்தை எம்.எசு. பிரசாந்த், குழிப்பந்தாட்டம் விளையாட்டை விளையாட இவரை ஊக்குவித்தார். அவனி பிரசாந்து பெங்களூரில் உள்ள கிரீன்வுட்டு உயர் பன்னாட்டுப் பள்ளியில் கல்வி கற்றார். 3 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் என்ற இளம் வயதில் இவர் குழிப்பந்தாட்டம் விளையாடத் தொடங்கினார்.[2] She is currently India's No. 1 amateur golfer.[3] தற்போது இந்தியாவின் முதல்நிலை தொழில்சாரா குழிப்பந்தாட்ட வீராங்கனையாக உள்ளார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லாரன்சு பிரதர்ட்சின் கீழ் நான்கு ஆண்டுகள் இவர் பயிற்சி பெற்றார்.[1]
தொழில்சாரா வீராங்கனை
[தொகு]2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மும்பையில் நடந்த ஈரோ வுமன்சு தொழில்சார் குழிப்பந்தாட்ட விளையாட்டு சுற்றுப்பயணத்தில் அவனி பிரசாந்து பிரசாந்த் தனது முதல் போட்டியை வென்றார்.[2] இதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் பஞ்சுகுலாவில் நடந்த ஈரோ வுமன்சு தொழில்சார் குழிப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டியில் தனது இரண்டாவது போட்டியில் வென்றார்.[4] அகில இந்திய பெண்கள் மற்றும் தொழில்சார் பட்டங்கள் இரண்டையும் வென்றார்.[5] அபுதாபியில் நடந்த பெண்கள் தொழில்சார் ஆசிய பசிபிக் குழிப்பந்தாட்ட வெற்றியாளர் போட்டியில் விளையாடி டி-16 போட்டியை முடித்தார்.[3]
2022 ஆம் ஆண்டில், இவர் தனது மூன்றாவது ஈரோ வுமன்சு தொழில்சார் குழிப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டியிலும், 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு பிரிவுகளில் தங்கம் வென்றார்.
2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இராணி சிரிகிட் கோப்பையில் அவனி பிரசாந்து இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், அந்த அணி தென் கொரியாவிடம் தோற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. தனிப்பட்ட நபர் போட்டியில் அவனி பிரசாந்து வெற்றி பெற்றார். 2023 மே மாதத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தேர்வு சோதனைகளில் முதலிடம் பிடித்தார். செப்டம்பரில், இவர் அல்செல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று எல்இடி அணுகல் தொடரில் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.[6]
வெற்றிகள்
[தொகு]- 2020 வெற்றியாளர் பிரெசுடீச்சு இளையோர் & அமெச்சூர் போட்டி
- 2021 இந்திய குழிப்பந்தாட்ட சங்க அகில இந்திய பெண்கள் தொழில்சாரா வெற்றியாளர்
- 2022 இந்திய குழிப்பந்தாட்ட சங்க தெலுங்கானா பெண்கள் & இளைய பெண்கள் குழிப்பந்தாட்ட வெற்றியாளர் , தேசிய விளையாட்டு, இந்திய குழிப்பந்தாட்ட சங்க மேற்கு இந்தியா பெண்கள் மற்றும் இளைய பெண்கள் குழிப்பந்தாட்ட வெற்றியாளர் , அகில இந்திய பெண்கள் தொழில்சாரா வெற்றியாளர், அகில இந்திய இளையோர் போட்டி வெற்றியாளர்
- 2023 ராணி சிரிகிட்டு கோப்பை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Rozario, Rayan (2023-08-23). "Indian golf's young superstar Avani Prashanth looking to make it count at the Asian Games". Sportstar. Retrieved 2023-09-27.
- ↑ 2.0 2.1 "Avani gears up to shine on the big stage". The Times of India. 2021-11-10. https://timesofindia.indiatimes.com/sports/golf/top-stories/avani-gears-up-to-shine-on-the-big-stage/articleshow/87627935.cms.
- ↑ 3.0 3.1 "Avani Prashanth". World Amateur Golf Ranking. Retrieved 2023-09-27.
- ↑ "Avani puts pros in the shade". The Times of India. 2021-10-23. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/avani-puts-pros-in-the-shade/articleshow/87215384.cms.
- ↑ "Meet Avani Prashanth, the 15-year-old breaking barriers at the Augusta National Women's Amateur". Golf Digest. Retrieved 2023-09-27.
- ↑ Achal, Ashwin (2023-09-01). "After making history, Avani Prashanth shoots for the stars". The Hindu. https://www.thehindu.com/sport/other-sports/after-making-history-avani-prashanth-shoots-for-the-stars/article67261248.ece.