உள்ளடக்கத்துக்குச் செல்

அவனா இவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவனா இவன்
இயக்கம்எஸ். பாலச்சந்தர்
தயாரிப்புஎஸ். பாலச்சந்தர்
எஸ். பி. கிரியேஷன்ஸ்
கதைகதை எஸ். பாலச்சந்தர்
இசைஎஸ். பாலச்சந்தர்
நடிப்புஎஸ். பாலச்சந்தர்
வசந்தி
வெளியீடுஆகத்து 31, 1962
நீளம்4341 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அவனா இவன் என்பது 1962 ஆம் ஆண்டு எஸ். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இந்தப் படம் 1951 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படமான எ பிளேஸ் இன் தி சன் திரைப்படத்தின் பாதிப்பில் உருவாக்கபட்டபடமாகும். அது தியோடர் டிரைசர் எழுதிய "ஆன் அமெரிக்கன் டிராஜடி" என்ற புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் எஸ். பாலச்சந்தர், வசந்தி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கதைச்சுருக்கம்

[தொகு]

குமார் (எஸ். பாலச்சந்தர்) தன் மனைவி சுமதியைக் (லட்சுமி ராச்சியம்) கொன்று, வசந்தி என்ற வேறொரு பெண்ணை மணக்கிறான். இந்தக் கொலையை சுற்றுலா வரும் இரண்டு குழந்தைகள் (பேபி பத்மினி< மாஸ்டர் சிறீதர்) பார்த்துவிடுகின்றனர். அவர்கள் கொலையாளியைக் கண்டுபிடிக்க உதவுகின்றனர். இறுதியில், குமார் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்படுகிறான். அப்போது தான் பிடிபட காரணமான குழந்தைகளைப் பார்த்து அவன் கண் சிமிட்டியபடி "டா டா" காட்டுகிறான்.

நடிப்பு

[தொகு]

நடிகர்கள்[1]
நடிகைகள்[1]

தயாரிப்பு

[தொகு]

இந்தப் படம் தியோடர் டிரைசர் எழுதிய "ஆன் அமெரிக்கன் டிராஜெடி" என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க திரைப்படமான "எ பிளேஸ் இன் தி சன்" என்ற படத்தின் தழுவலாகும்.[2] இந்த புதினமானது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்காவையே உலுக்கிய ஜில்லெட் கொலை வழக்கின் பாதிப்பில் எழுதப்பட்டது. அசல் படம் இந்தியாவில் பெரும் வெற்றியைப் பெற்றது. எஸ். பாலசந்தர் இந்தப் படத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டு, படத்தை தமிழில் மறுஆக்கம் செய்ய முயன்றார், இதன் மூலம் அவர் தயாரிப்பாளராக அறிமுகமானார். அவர் தனது நிறுவனத்திற்கு எஸ். பி. கிரியேஷன்ஸ் என்று பெயரிட்டார். இதுவே ஒரு தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு "கிரியேஷன்ஸ்" என்ற வார்த்தை முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்ட தயாரிப்பு நிறுவனமாகும்.[3]

இசை

[தொகு]

இப்படத்திற்கு எஸ். பாலசந்தர் இசையமைத்தார், பாடல் வரிகளை வித்வான் வே. லட்சுமணன் எழுதினார்.[1]

பாடல்பாடகர்நீளம்
"கல்யாண பொண்ணு கலங்காதே கண்ணு"எல். ஆர். ஈசுவரி, ரேணுகா04:07
"கல்யாணத் திருநாள்"பி. சுசீலா
"மனம் விட்டுச் சிரித்து"ரேணுகா, சீதா, கமலா03:07
"வாலி வாலி வள்ளி"பட்டம் சதன், ரேணுகா03:33
"வாரணமாயிரம் சூழ வளம் செய்"ராதா ஜெயலட்சுமி

வெளியீடும் வரவேற்பும்

[தொகு]

"கதை, கையாளும் முறை, இசை, உரையாடல் பேசும் பாணி போன்றவை அவனா இவன்?" திரைப்படத் தயாரிப்பில் ஒரு புதிய வடிவத்தில் அமைக்கபட்டதாக கூறப்படுகிறது" என்று இந்தியன் எக்சுபிரசு எழுதியது.[4] படம் தயாரிக்கப்படுவதற்கு முன்பு, பாலசந்தர் நடிகர்கள் மற்றும் பணியாற்றியவர்களுக்கு வெற்று காசோலைகளை அனுப்பிய, அவர்களின் விருப்பப்படி தொகையை நிரப்பிக் கொண்டு அலுவரகத்தில் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டாராம் எஸ். பாலச்சந்தர். 1962 ஆகத்து 31 படம் வெளியானது. ஆனால் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.[3][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 அவனா இவன்!? (PDF) (song book). SB Creations. 1962. Retrieved 5 July 2022 via Internet Archive.
  2. "Bang On With The Bioscope". Sruti. No. 65–76. 1990. pp. 34–35. Archived from the original on 1 July 2022. Retrieved 21 September 2016.
  3. 1 2 Randor Guy (17 September 2011). "Avana Ivan 1962". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211206065941/https://www.thehindu.com/features/cinema/avana-ivan-1962/article2462010.ece.
  4. "Avana Ivan? Opens New Chapter In Film History". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 31 August 1962. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19620831&printsec=frontpage&hl=en.
  5. V, Lakshmi (10 March 2010). "Horror films disappoint movie buffs". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 1 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220701135110/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Horror-films-disappoint-movie-buffs/articleshow/5663064.cms.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவனா_இவன்&oldid=4588175" இலிருந்து மீள்விக்கப்பட்டது