அவகாதரோவின் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அவகாதரோவின் விதி (Avogadro's law) இத்தாலியை சேர்ந்த வேதியியல் அறிஞர் அமேடியோ அவகாதரோ முன்மொழிந்த ஒரு வாயு விதியாகும். ஒரே வடிவுடைய கலனில் அடைத்துவைக்கப்பட்ட ஒரே கொள்ளளவுள்ள வெவ்வேறு வாயுக்கள் ஒரே வெப்பநிலையில், ஒரே அழுத்ததில் இருக்கும் போது அதன் அணு மூலக்கூறுகள் ஒத்த எண்ணிக்கையில் இருக்கும் என்று கூறினார் அவகாதரோ. இவரது இந்த கண்டுபிடிப்பு அவரது பெயரிலேயே அவகதரோவின் விதி என்று அறியப்படுகிறது.

அவகாதரோவின் விதி பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:

\frac{V}{n} = k

இங்கு:

V - வளிமத்தின் கனவளவு
n - வளிமத்தின் உள்ள பொருளின் அளவு
k - விகித மாறிலி

அனைத்து வளிமங்களுக்கும் இலட்சிய வளிம மாறிலி ஒரே அளவாக இருக்கும் என்பது அவகாதரோவின் விதியின் முக்கிய அம்சமாகும். அதாவது,

\frac{p_1\cdot V_1}{T_1\cdot n_1}=\frac{p_2\cdot V_2}{T_2 \cdot n_2} = constant

இங்கு:

p - வளிமத்தின் அமுக்கம்
T - வளிமத்தின் வெப்பநிலை (கெல்வினில்)

இலட்சிய வாயு விதி[தொகு]

மேலே தரப்பட்ட சமன்பாட்டில், R என்பதை விகித மாறிலியாகக் கொண்டால், பின்வரும் சமன்பாட்டைப் பெறலாம்:

pV = nRT

இச்சமன்பாடு இலட்சிய வாயு விதி என அழைக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவகாதரோவின்_விதி&oldid=1916068" இருந்து மீள்விக்கப்பட்டது