அழுகண்ணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அழுகண்ணி
Drosera burmanni Humpty Doo.jpg
Drosera burmannii from Humpty Doo, Australia.
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Core eudicots
வரிசை: Caryophyllales
குடும்பம்: Droseraceae
பேரினம்: பனிப்பூண்டு
துணைப்பேரினம்: Thelocalyx
இனம்: D. burmannii
இருசொற் பெயரீடு
Drosera burmannii
Vahl
வேறு பெயர்கள்
  • D. burmannii var. dietrichiana (Rchb.f.) Diels
  • D. dietrichiana Rchb.f.

அழுகண்ணி (drosera burmanni) என்பது கிடைப்பதற்கு அரிதான ஒரு காயகற்ப மூலிகை ஆகும். இது ஒரு அடி நீளம் வளரும் ஒரு குத்துச் செடி. இம் மூலிகைக்கு வடமொழியில் ருதந்தி என்றும் சாவ்வல்யகரணி என்றும் பெயர் உண்டு. இதன் இலை தடிமனாகவும் வழுவழுப்பாகவும் கடலை இலையினைப் போலவும் இருக்கும். இதன் இலையின் நுனியில் இருந்து பனித்துளி போல் நீர் கசிந்து கொண்டே இருக்கும். அதனால் இந்தச் செடிக்கு அடியில் பூமியில் எப்போதும் ஈரப்பதம் இருக்கும். இந்த நீர் இனிப்புச் சுவை உடையதால் எப்போதும் எறும்பு மொய்த்துக்கொண்டே இருக்கும். இது ஒரு ஜீவ சக்தி உடைய மூலிகை. இது ஒரு பூண்டு வகையைச் சார்ந்தது என்று ஆங்கிலத்தில் கூறுவர். சதுரகிரி மலையில் இம் மூலிகை இருக்கிறது.

மருத்துவ குணங்கள்[தொகு]

இதனை முறைப்படி 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு, பிணி இன்றி நெடுங்காலம் வாழலாம். இக் காயகற்ப மூலிகையை முறைப்படி உண்டுவந்தால் உடலில் வெட்டுப்பட்ட பாகங்களை உடனே இணைக்கும் என்று சித்தர் பாடல்கள் குறிப்பிடுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழுகண்ணி&oldid=2174816" இருந்து மீள்விக்கப்பட்டது