அழுகணிச் சித்தர் பாடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

3

அழுகணிச் சித்தர் பாடல் அழுகணிச் சித்தர் என்பவரால் பாடப்பட்டது. அழுகின்ற இசையின் பாணியில் பாடல்கள் உள்ளன. 32 கலித்தாழிசைப் பாடல்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.

"கண்ணம்மா என விளித்துச் சித்தர் பாடும் பாடல்களிலே துன்பச் சுவை மிகுந்து காணப்படுகின்றது. உலகியல்பையும் தத்துவ அறிவையும் புலப்படுத்தும் பாடல்களிலே உருவகமாக அமையும் செய்திகள் அதிகமாக உள்ளன." [1][2]

அழுகுணிச் சித்தரின் பாடல் ஒன்று[தொகு]

புல்லர் இடத்திப்போய்ப் பொருள் தனக்குக் கையேந்தி
பல்லைமிகக் காட்டிப் பரக்க விழிக்கிறண்டி!
பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா!

பொருள்:

நல்வழியைக் கைவிட்டுத் தீ நெறியிலே நடப்போர் துறவு வேடம் பூண்டிருந்தாலும் உணவுக்கும் உடைக்கும் திண்டாடுவார்கள். மானந்துறந்து, பொருள் வேண்டி கையேந்தி பல்லைக்காட்டி பரக்கப் பரக்க விழிப்பார்கள். இந்நிலையை அழுகணிச் சித்தர் தன்மேல் ஏற்றிப் பாடுகிறார். நான் இந்நிலையில் இருக்கின்றேன். என்னுடைய இந்நிலையை போக்க வேண்டும். எனக்கு அருள்வாயாக. பொருளைத் தரவேண்டும் என்று சத்தியை வேண்டுகிறார்.[3]

வெளியீடுகள்[தொகு]

  • பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை (முருகேசநாயகர் 1899, வி. சரவணமுத்துப்பிள்ளை 1907)
  • பதினெண்சித்தர் பெரிய ஞானக்கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள் (அரு இராமநாதன், 1959)

மேற்கோள்கள்[தொகு]

  1. ஞானக்கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள் பதிப்பாசிரியர் அரு.இராமநாதன் பிரேமா பிரசுரம், 23 ஆற்காடு ரோடு, சென்னை 24 வெளியீடு, இரண்டு பாகம், மொத்தம் 686 பக்கம், ஐந்தாம் பதிப்பு 1986 - பக்கம் 233-237
  2. * இந்துக்கலைக் களஞ்சியம் (பொ. பூலோகசிங்கம், 1990, கொழும்பு)
  3. * சித்தர்கள் கலைக் களஞ்சியம் (எஸ்.ஆர். சங்கரலிங்கனார், 1997, சித்தாசிரமம், சென்னை)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழுகணிச்_சித்தர்_பாடல்&oldid=3232516" இலிருந்து மீள்விக்கப்பட்டது