அழிப்பு இயக்கி
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
அழிப்பு இயக்கி அல்லது அழிதற் செயலி (annihilation operator) என்பது ஒரு துளிம இயந்திரவியல் இயக்கி/செயலி ஆகும். துளிமச் சீரிசை அலைவிகளை ஆராய இது பயன்படுகிறது. மேலும் முழுச்சுழலிகள் (போசான்கள்) அழிந்துபடும் செயல்முறையை விளக்கவும் இச்செயலி பயன்படுகிறது.
Ψ (n) என்று குறிக்கப்படும் n துகள்களை உடைய ஒரு அலைச்சார்பின் மீது a என்ற அழிப்பு இயக்கி ஒரு முறை செயல்படும்போது அதிலிருந்து ஒரு துகள் நீக்கப்பட்டு Ψ (n-1) என்ற அலைச்சார்பினால் குறிக்கப்படும் (n-1) துகள்களை உடைய ஒரு நிலையை அடைகிறது.
அதாவது :
அழிப்பு இயக்கி n துகள்கள் உள்ள நிலையின்மீது n முறை தொடர்ந்து செயல்படும்போது அனைத்துத் துகள்களும் அழிக்கப்பட்டு அது வெற்றிடமாக மாறுகிறது. வெற்றிடத்தின்மீது அழிப்பு இயக்கி செயற்படும்போது அந்த நிலையே அழிக்கப்பட்டு சுழியாக மாறுகிறது.
அதாவது : (இச்சமன்பாடு ஒரு துளிம இயந்திரவியல் அலைவியின் அடிநிலையைக் கண்டறிய உதவுகிறது).
கலைச்சொற்கள்
[தொகு]- துளிம இயந்திரவியல் இயக்கி/செயலி = quantum mechanical operator
- சீரிசை அலைவி = harmonic oscillator | முழுச்சுழலி = boson
- அலைச்சார்பு = wave function | அடிநிலை = ground state
மேற்கோள்
[தொகு]இயல்பியல் களஞ்சியம் - ப.க. பொன்னுசாமி - பக். 72 - முதற் பதிப்பு 1997