அழிந்துபோன நாய் இனங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அழிந்துப்போன நாய் இனங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அழிந்துபோன நாய் இனங்களின் பட்டியல்[தொகு]

Name Image Notes
அலான்ட் நடுக்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட பெரிய அளவிலான ஓடும்வகை வேட்டை நாய்கள் இவை.[1]
ஆல்பைன் மாசுதிப்பு உரோமர்களால் அறிமுகப்பபடுத்தப்பட்டதாக நம்பப்படும் குறுகிய முடியுடைய நாய்களான இவை, நடுக்ககாலத்தில் பிரபலமாக இருந்த மாசுதிப்பு வகை நாய்களின் இனத்தைச் சேர்ந்தவையாக இருந்தன.[2]
அர்கெந்தீன பனி நாய் 1950களில் அர்கெந்தீன அரசால் அந்தாட்டிக்காவில் இழுநாய்களாக இவை பயன்படுத்தப்பட்டன. அங்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் கைவிடப்பட்டபோது, இந்நாயின வளர்ப்பும் கைவிடப்பட்டது.[3]
மாசுக்கோ புனல்நாய் மாசுக்கோவில் பயன்படுத்தப்பட்ட ஒரு மீன்பிடி நாயினம்.
பெல்கிய மாசுதிப்பு கீழமை நாடுகளில் பணி விலங்காக பயன்படுத்தப்பட்ட இவ்வகை மாசுதிப்புகள் இருபதாம் நூற்றாண்டில் தேவையின்மை காரணமாக அழிந்து போனதாக கருதப்படுகின்றன.[4]
கறுப்பு மற்றும் பழுப்பு தெரியர் பெரிய பிரித்தானியாவில் பிரபலமாக இருந்த இந்த தடித்ததோல் கொண்ட ஆங்கில நாயினம்
இக்கால தெரியர்களின் முன்னோடி. [5]
நீலபால் தெரியர் இசுக்காட்லாந்தில் இருந்த எருதுவகைத் தெரியரின் ஆங்கிலேய திரிபினமான இவ்வகை நாய்கள் நாய்ச்சண்டைக்காக பயன்பட்டன. நாய்ச்சண்டை நடத்துவது குற்றமென அறிவிக்கப்பட்டப்பின் இவ்வினம் அழிந்துபோனது.

[6]

பிராக்தூப்பி பிரெஞ்சு வகை நாயினமான இது, இக்கால கிரே ஔன்டர் நாயினத்தின் முன்னோடியாக கருதப்பதுகின்றது. [7]
எருதுவகைத் தெரியர் இவ்வகைத் தெரியர்கள் நாய்ச்சண்டைக்காக பயன்பட்டன. [8]
எருதுவகைப்பீசர் செர்மனிய நாயினமான இவை, வேட்டைக்காக பயன்பட்டன. இவ்வகை நாயினம், இக்கால பாக்சர் நாயினத்தின் முன்னோடியாக கருதப்பதுகின்றது.[9]
சீன்கிரீசு நடுக்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட பிரெஞ்சு வகை நாயினமான இது, அரசர் லூயிசு IXஆல் அறிமுகப்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.[10]
சிரிபயா நாய் தென்மேற்கு பெருவில் காணப்பட்ட மேய்ப்பு நாயினம் இது.[11][12]
கார்டோபா சண்டை நாய் அர்கெந்தீனாவில் நாய்ச்சண்டைக்காக பயன்படுத்தப்பட்ட நாயினம்.[13][14]
அவாயன் போய்நாய் ஐரோப்பிய இடம்பெயர்வுக்கு முன், அவாய் தீவுகளில் இறைச்சிக்காக வளர்க்கப்பட்ட நாயினம். காலப்போக்கில் ஐரோப்பிய உணவுகள் பிரபலமடைந்ததன் காரணத்தால் அழிந்து போனது. [15]
வடநாட்டு பீகில் அளவான எடையுற்றிருந்த ஆங்கிலேய மோப்பநாய்.[16]
பழைய குரோவாசிய பார்வை ஔன்டு நடுக்ககாலத்தில் பந்தயங்களுக்கு பயன்படுத்தப்பட்ட குரோவாசிய நாயினம்.[17]
தென் ஔன்டு பதினெட்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பிரபலமான ஆங்கில வேட்டை நாயினம். [18]
தால்பாட்டு நாய் நடுக்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட மோப்ப நாயினம். குற்றவாளிகளைப் பிடிக்க பயன்பட்டது. [19]
வெல்சு இல்மன் வேல்சைச் சேர்ந்த ஆங்கிலேய மேய்ப்பு நாயினம்.[20]

மேற்கோள்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Cummins (2001), ப. 14.
  2. Fogle (2009), ப. 257.
  3. Maida (2015).
  4. Morris (2001), ப. 666.
  5. Hancock (1984), ப. 13.
  6. Morris (2001), ப. 348-349.
  7. Morris (2001), ப. 255-257.
  8. Morris (2001), ப. 346.
  9. Fiorone (1973), ப. 89.
  10. Hörter (2014).
  11. Collyns, Dan (September 23, 2006). "Mummified dogs uncovered in Peru". BBC News (Lima). http://news.bbc.co.uk/2/hi/americas/5374748.stm. 
  12. Leonard, Jennifer A. (2002-11-22). "Ancient DNA evidence for Old World Origin of New World Dogs". Science 298 (5598): 1613–1616. doi:10.1126/science.1076980. பப்மெட்:12446908. Bibcode: 2002Sci...298.1613L. 
  13. Mulkeen, Verity (11 May 2009). "Amores Perros: Dog Fighting in Argentina". The Argentina Independent. Archived from the original on 2013-06-17.
  14. Larry Levin (2010). Oogy: The Dog Only a Family Could Love. Grand Central Publishing. பக். 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-446-57487-7. https://books.google.com/books?id=7A97laKeCecC&q=cordoba&pg=PT67. 
  15. Wilcox & Walkowicz (1995), ப. 494-495.
  16. Hancock (2014b), ப. 62-64.
  17. Morris (2001), ப. 32.
  18. Alderton (2000), ப. 58-59.
  19. Alderton (2000), ப. 41 & 88.
  20. Hancock (2014a), ப. 11.

நூலியல்[தொகு]