அழகி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அழகி
வகை நாடகம்
இயக்குனர் இ. விக்கிரமாதித்தன்
அ. ஜவகர்
நடிப்பு விஜி சந்திரசேகர்
நாடு இந்தியா
மொழி தமிழ்
மொத்த  அத்தியாயங்கள் 1,101
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஒளிபரப்பு நேரம் ஏறத்தாழ 15-20 நிமிடங்கள் (ஒருநாள் ஒளிபரப்பு)
தயாரிப்பு
நிறுவனங்கள்
விகடன் ஒளித்திரை
ஒளிபரப்பு
மூல அலைவரிசை சன் தொலைக்காட்சி
மூல ஓட்டம் 10 அக்டோபர் 2011 (2011-10-10) – 4 மார்ச்சு 2016 (2016-03-04)

அழகி விகடன் ஒளித்திரை தயாரிப்பில் இ. விக்கிரமாதித்தன் இயக்கத்தில் அக்டோபர் 10, 2011ஆம் ஆண்டு முதல் மார்ச் 4, 2016ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்ப கதைக்களத்தை கொண்ட மெகா தொடர் ஆகும். இந்த தொடர் 1,101 அத்தியாயங்களில் நிறைவடைந்தது.

கதை சுருக்கம்[தொகு]

கணவனை இழந்த சுந்தரி என்னும் பெண், தனது மூன்று குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்குவதில் சந்திக்கும் போராட்டங்களை விவரிக்கிறது இத்தொடர்.

நடிப்பு[தொகு]

  • விஜி சந்திரசேகர் -சுந்தரியாக
  • நந்தினி
  • சுஜாதா
  • அருண் குமார்
  • இளவரசன்
  • வின்சென்ட் ராய்
  • கமல் தீப்
  • சோனியா
  • ராதா

மொழிமாற்றம்[தொகு]

இந்த தொடர் தெலுங்கு மொழியில் அம்மா என்ற பெயரில் மறு தயாரிப்பு செய்யப்பட்டு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஜெமினி தொலைக்காட்சி யிலும் மற்றும் மலையாளம் மொழியில் அம்மா மனசு என்ற பெயரில் மறு தயாரிப்பு செய்யப்பட்டு சூர்யா டிவி யில் ஒளிபரப்பானது.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு விருது பிரிவு பெற்றவர் கதாபாத்திரம் முடிவு
2012 சன் குடும்பம் விருதுகள் சிறந்த தாய் விஜி சந்திரசேகர் சுந்தரி வெற்றி
2014 சன் குடும்பம் விருதுகள் சிறந்த தாய் விஜி சந்திரசேகர் சுந்தரி வெற்றி
சிறந்த அப்பா வின்சென்ட் ராஜ் பரிந்துரை
சிறந்த காமெடி நடிகை சுஜாதா பாஞ்சாலி பரிந்துரை

இவற்றை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]