அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், வடக்கு திருவீதி பிள்ளைக்கு, மார்கழி மாத, அவிட்ட நட்சத்திரத்தில், ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர். இவரது மூத்த சகோதரர் பிள்ளை லோகாசாரியார் ஆவார். இவர் தமது தந்தை வடக்கு திருவீதி பிள்ளையிடம் பாடம் பயின்றவர். பெரியவாச்சான் பிள்ளைக்குப் பின்பு, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்வியப்பிரபந்தங்கள் சிலவற்றுக்கு விளக்க உரை அருளியுள்ளார்.[1]
படைப்புகள்[தொகு]
- திருப்பாவை ஆயிரப்படி விளக்க உரை
- கண்ணிநுண் சிறுத்தாம்பு விளக்க உரை
- அமலனாதிபிரான் விளக்க உரை
- அருளிச்செயல் இரகசியம் (ஆழ்வார்களின் அமுதச்சொற்களைக் கொண்டே எழுதப்பட்ட ரகசியத்திரய விவரணம்),
- ஆச்சார்ரிய இருதயம்