சாப்டூர் அழகாபுரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அழகாபுரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

அழகாபுரி (Alagapuri) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மேற்கு தொடரச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இது மதுரை மாவட்டம், சாப்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது[1]. இதை சாப்டூர் அழகாபுரி என்று அழைப்பார்கள்.

வரலாறு[தொகு]

சாப்டூர் அழகாபுரி 72 அங்கீகரிக்கப்பட்ட பழைய மதுரை பாளையங்களில் ஒன்று. இது தற்போதைய மதுரை மாவட்டத்தின் தே. கல்லுப்பட்டியில் இருந்து 19 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரானது 1859ல் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து மதுரை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

புவியியல் அமைப்பு[தொகு]

9.69oN 77.59 oE ல் இவ்வூர் அமைந்துள்ளது.

கோவில்கள்[தொகு]

  • ஸ்ரீ முத்தாலம்மன் கோவில்
  • சந்தன மாரியம்மன் கோவில்

திருவிழாக்கள்[தொகு]

வருடத்தின் பங்குனி மாதம் வளர்பிறையில் இந்த பங்குனிப்பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது . இது, இக்கிராமத்தின் மிக முக்கியத் திருவிழா ஆகும். சந்தன மாரியம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழா நடைபெறும் பொழுது வெளியூரில் வசிக்கும் அழகாபுரி மக்கள் அழகாபுரிக்கு வந்து தங்கள் சொந்தங்களுடன் இணைந்து இத்திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். இந்த திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும்.அனைத்து விதமான நேர்த்திக் கடன்களும் இந்த மூன்று நாட்களில் கடா வெட்டுதல் முதல் நாளில் நடைபெறும் மேலும் அம்மனுக்குச் செலுத்தப்படும். முக்கியமான மூன்றாம் நாளன்று தங்கள் மாமன் முறை உறவினர் மேல் மஞ்சள் நீரை ஊற்றியும் மற்றும் வண்ணப்பொடிகளைத் தூவியும் தங்கள் மகிழ்ச்சியினை மக்கள் வெளிப்படுத்துவார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாப்டூர்_அழகாபுரி&oldid=2301161" இருந்து மீள்விக்கப்பட்டது