அழகர்கோவில் ஊராட்சி
தோற்றம்
அழகர்கோவில் ஊராட்சி, தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஏ. வலையபட்டி ஊராட்சியில் இருந்த அழகர் கோவில், கோணவராயன்பட்டி, ஆயத்தபட்டி ஆகிய மூன்று சிற்றூர்களைக் கொண்டு புதிதாக அழகர்கோவில் ஊராட்சி நிறுவப்பட்டது.[1]இதன் தலைமையிடம் அழகர் கோவிலில் உள்ளது.
அமைவிடம்
[தொகு]அழகர் மலை அடிவாரத்தில் அமைந்த அழகர்கோவில் ஊராட்சி மதுரைக்கு வடகிழக்கே 24.7 கிலோமீட்டர் தொலைவிலும்; மேலூருக்கு வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
புகழ் பெற்ற தலங்கள்
[தொகு]இவ்வூராட்சியில் புகழ்பெற்ற அழகர் கோவில், பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி, பழமுதிர்சோலை முருகன் கோயில், நூபுர கங்கை தீர்த்தம் மற்றும் ராக்காயி அம்மன் கோயில் உள்ளது.
அரசியல்
[தொகு]அழகர்கோவில் ஊராட்சி மேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.