அழகப்பா ராம்மோகன்
அழகப்பா ராம்மோகன் (பிறப்பு 1939) என்பவர் ஒரு ஐக்கிய அமெரிக்காவின், இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சிகாகோ நகரில் வாழும் தமிழர்.[1] இவர் பிறந்தது மலேசியாவின் பினாங்கு பூர்வீகம் தமிழகத்தின் உள்ள கானாடுகாத்தான். தமிழைப் பரப்புவதற்காகவும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு உதவுவதற்காகவும் உலக தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை அமைப்பை உருவாக்கி அதன் இயக்குநராக உள்ளார்.
திருக்குறள் பணிகள்[தொகு]
அமெரிக்காவில் பொறியாளராக பணியாற்றிய இவர் ஓய்வு பெற்ற பிறகு தமிழ்ப் பணிகள் செய்யத்துவங்கினார். 2000 ஆண்டு திருக்குறள் பொதுமறை என்ற பெயரில் திருக்குறள் நூலை 1,824 பக்கங்களுடன் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் நான்கு பக்கங்களில் படங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம் போன்றவற்றுடன் உயர்ந்த தரத்தில் பைபிள் தாளில் அச்சிட்டு சென்னையில் வெளியிட்டார். இதைத் தவிர, காமத்துப் பால் குறள்களையும் எஸ்.பி.பி. - சித்ரா ஆகியோரைக் கொண்டு பாட வைத்து குறுந்தகடுகளாக பதிவு செய்திருக்கிறார். திருக்குறளின் கருத்துகளை 108 மந்திரங்களாக்கி அதையும் பத்து நிமிடம் ஓடக்கூடிய குறுந்தகடு மற்றும் ஒலி நாடாவாக வெளியிட்டிருக்கிறார்.[2]
தமிழில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் படைப்பு[தொகு]
அமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்குப் எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என 1986-ல் அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தை ஆங்கிலத்தில் உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார். இத்தகைய சிறந்த படைப்பைத் அழகப்பா ராம்மோகன் தமிழ்ப் பிள்ளைகளுக்காக 2000 ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழில் மொழியாக்கம் செய்தார். இதுவரை தமிழகம், இலங்கை, மலேசியா மற்றும் புதுச்சேரியில் 68 பள்ளிகளில் இந்தப் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துவிட்டார். தமிழக குழந்தைகளுக்கும் கொண்டுவந்து சேர்க்க முயற்சி செய்துவருகிறார்.[3]
எழுதிய நூல்கள்[4][தொகு]
- திருக்குறள் - தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு 2000
- தொழில் முனைப்பாற்றலும் தமிழர்களும் 2005
- நினைக்கப்பட வேண்டியவர்கள், 2002
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "அழகப்பா இராம்மோகன் உடன் மின்காணல்". சிபி. 6 ஏப்ரல் 2016 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "தமிழா... தமிழா..." தி இந்து (தமிழ்). மார்ச், 29. 2016. 6 ஏப்ரல் 2016 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி) - ↑ "காட்சி வழி குறுந்தகடு வழங்கல்". தினமணி. 5 மார்ச் 2016. 6 ஏப்ரல் 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "ராம்மோகன், அழகப்பா". விருபா. 6 ஏப்ரல் 2016 அன்று பார்க்கப்பட்டது.