அழகசுந்தரம்
Jump to navigation
Jump to search
பிரான்சிஸ் கிங்ஸ்பரி Francis Kiingsbury | |
---|---|
பிறப்பு | அழகசுந்தரம் ஆகத்து 8, 1873 தண்டையார்பேட்டை, சென்னை |
இறப்பு | 1941 |
பணி | தமிழ்ப் பேராசிரியர் |
பணியகம் | இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு |
சமயம் | கிறித்தவம் |
பெற்றோர் | சி. வை. தாமோதரம்பிள்ளை நாகமுத்து |
அழகசுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட பிரான்சிஸ் கிங்ஸ்பரி (Francis Kingsbury, 1873 - 1941) யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களின் புதல்வர்.[1] பின்னாளில் கிறித்தவ மதத்தைத் தழுவிய இவர் திருமுழுக்கின் போது பிரான்சிஸ் கிங்ஸ்பரி எனும் பெயரை ஏற்றுப் பாதிரியாராக இருந்தார். சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதிக் குழுவில் இவர் உறுப்பினராக இருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
சென்னைக்கு சில மைல் தொலைவில் உள்ள தண்டையார்பேட்டை என்னும் புறநகரில் வசித்து வந்தவர் சி. வை. தாமோதரம்பிள்ளை. இவருக்கும் இவரது இரண்டாவது மனைவி நாகமுத்து என்பவருக்கும் பிறந்த ஐந்து பிள்ளைகளில் நான்காவதாகப் பிறந்தவரே அழகசுந்தரம். இவர் பிறந்தது 1873 ஆவணி 8-ஆம் நாள்.[2]
இயற்றிய நூல்கள்[தொகு]
இவர் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார்.[3] அவற்றில் சில:
- ஏசு வரலாறு
- அகப்பொருட் குறள்
- இராமன் கதை
- பாண்டவர் கதை
- சந்திரகாசம்
- மனோன்மணி நாடகம் (1948, இலங்காபிமானி அச்சியந்திரசாலை, சாவகச்சேரி)
- Hymns of the Tamil Saivite Saints (மறுபதிப்பு: Nabu Press, 2011)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "அழகசுந்தர தேசிகர் இயற்றிய கவிதை". சாகித்திய மண்டல வெளியீடு - நூலகம் திட்டத்தில் பேணப்படுகிறது.. பார்த்த நாள் ஆகஸ்ட் 05, 2013.
- ↑ தேசிகர் நினைவு மலர் 1942, தொகுப்பு: கோவைவாணன், சாவகச்சேரி, சித்திரை 1942
- ↑ "அழகசுந்தரம் இயற்றிய நூல்கள்". கலைக்களஞ்சியம் (1) 1. (1954). தமிழ் வளர்ச்சிக் கழகம் - சென்னை. 237.