அளவைச் சாதனங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அளவைச் சாதனங்களின் பட்டியல்[தொகு]

அளவைச் சாதனங்களின் பட்டியல்

அளவைச்சாதனம் அளவை அளவிட
முருக்கமானி, வேகவளர்ச்சிமானி - accelerometer இருப்பு சார்ந்த முருக்கம்
தாக்கமானி - actinometer சூாிய ஒளியின் வெப்பப்படுத்தும் வழு
அற்ககோல்மானி - alcoholmeter திரவங்களின் சாராயவலு
உயரமானி - altimeter குத்துயரம், உயரநிலை
மின்னோட்டமானி,அம்மீட்டர் - ammeter மின்னோட்டம்
காற்று வேகமானி - anemometer காற்றின் வேகம்
கோள்காண் வட்டு - astrolabe வான்பொருள்களின் குறுக்குக்கோடு மற்றும் குத்துக்கோடு அளவிட
கேள்திறமானி,செவிப்புலன்மானி,ஒலிச்செறிவுமானி - audiometer கேட்கும்திறன்
பதனிடு நீர்ம வலிமையளவி - barkometer தோல் பதனிட உதவும் பதனிடு வடிநீர்மம்
காற்றழுத்தமானி - barometer காற்றழுத்தம்
பெட்ஸ்சோமீட்டர் - bettsometer வானூர்தியின் துணி உறைகள் கூறுபடாநிலை அளவிட
பீவாமீட்டர் - bevameter மண்ணின் விசையியல் இயல்புகள்
வெப்பக்கதிாிமானி - bolometer மின்காந்த கதிர்வீச்சு
பிரனாக் சாதனம் - brannock device காலணி, புதைமிதி அளவை அளவிட
மூச்சு பகுப்பாய்வுக் கருவி - breathalyzer மூச்சில் மதுவின் உள்ளடக்கம்
நடைக்கவை - caliper தொலைவு
கலோரி மானி - calorimeter வேதிவினைகளின் வெப்பம்
உயரமானி, கேத்திட்டா மீட்டர் - cathetometer செங்குத்து தூரம்
மேக உயர அலவி - ceilometer முகிலடியின் உயரம்
கடிகாரம், காலமானி, மணிக்கூடு - chronometer or clock நேரம்
கரவொலிமானி - clap-o-meter கரவொலியின் ஒலியளவு
திசைமானி,திசைகாட்டி - compass வடக்குத்திசை காட்டும்
நிறமானி - colorimeter நிறம்
நகர்வு மானி, ஊர்நீட்சிமானி - creepmeter புவியின் இயக்கத்திலுள்ள உரசுமுனையின் (நிலத்தட்டுகள் உரசும் பகுதி) மந்தமான மேற்பரப்பு இடப்பெயர்ச்சியை அளவிட
சரிவுமானி - declinometer காந்த இறக்கம், காந்தச்சரிவு
அடர்த்தியளவி - densimeter நீர்மத்தின் ஒப்படர்த்தி/ தன்னீர்ப்பு
செறிவுமானி, நீர்ம அடர்வு மானி - densitometer பகுதி ஒளிபுகு பொருள்(சிறிதே ஒளி ஊடுருவும்) அல்லது ஒளிப்படத்துக்குரிய துல்லிய கருமை (இருள்) கணக்கிட
அலை வளைவு மானி - diffractometer படிகங்களின் கட்டமைப்பு
உப்பல் அளவி - dilatometer இயற்பியல் அல்லது வேதியியல் செயல்முறைகளால் ஏற்படும் கன அளவு மாற்றங்களை அளவிட
மழைத்துளி அளவறிவி - disdrometer மழைத்துளியின் அளவு, வேகம் மற்றும் திசைவேகம்
கதிாியக்க அளவுமானி - dosimeter கதிர்வீச்சு போன்ற ஆபத்தை வெளிப்படுத்துதல்
டம்பி மட்டக்கருவி - dumpy level படுக்கைநிலை, மட்டநிலை, கிடைநிலை
விசை அளவி, டைனமோ மீட்டர் - dynamometer விசை, முருக்கு விசை, வலு(வீாியம்)
ஈலோமீட்டர், எண்ணெய்களின் தூய்மையைச் சோதிக்கும் கருவி - elaeometer எண்ணெய்களின் ஒப்படர்த்தி
மின்னணு நிலை - electronic stand நிறை, பொருண்மை
மின்சாரமானி - electricity meter பயன்படுத்தப்பட்ட மின்னாற்றல்
மின் அளவி, எலெக்ட்ரோ மீட்டர் - electrometer மின்னூட்டம்
மின்னணு இசையாக்கி - electronic tuner இசைச்சுரத்தின் சுருதி
நீள்வட்டமை தளவிளைவு அளவி - ellipsometer ஒளிவிலகல் எண், மின்கடவாப் புலத்தின் செயல்பாடு, மெல்லிய படலத்தின் தடிமன்
காற்றுத் தூய்மமானி, வாயுமானி - eudiometer எாிதலுக்குப் பின் வாயுக் கலவையின் கனஅளவில் ஏற்படும் மாற்றம்
ஆவிமானி - evaporimeter ஆவியாதலின் விகிதம்
கடலாழமானி - fathometer கடலாழம்
உணர்மானி - feeler gauge இடைவெளி அகலம்
முன்னோக்கு அகச்சிவப்பு - forward looking infrared (FLIR)

அகச்சிவப்பு ஆற்றலை(வெப்பத்தை) ஆய்ந்து கண்டுபிடித்து அதை மின்னணு குறிப்பலை(சமிக்ஞை)களாக மாற்றிய பின் சில செயல்முறைகள் நடைபெற்று, நிகழ்பட மின் திரையில்(கானொலிதிரை) வெப்பத்தோற்றத்தை உருவாக்கி வெப்பநிலை கணக்கீடுகள் செய்யப்படுகிறது

தச்சர் சட்டகம் - framing square கட்டுமானத்தில் செங்கோணம்
அதிர்வெண் எண்ணி, அலைவெண் எண்ணி - frequency counter திசைமாறு மின் ஓட்டத்தின் அதிர்வெண்
எாிபொருள்மானி, எாிபொருள் அளவி - fuel gauge எாிபொருள் அளவு (மட்டம், நிலை)
மின்னோட்டமானி, கால்வனோமீட்டர் - galvanometer மின்சாரம்
வளி பருமனறி அடர்த்தி அளவி - gas pycnometer திடப்பொருள்களின் கனஅளவு (பருமன்) மற்றும் அடர்த்தி
கைகர் எண்ணி - geiger counter அயனா கதிர்வீச்சு, வெப்பக் கதிர்வீச்சு (ஆல்ஃபா, பீட்டா, காமா )
சர்க்கரை மானி, க்ளுகோ மீட்டர் - glucometer இரத்தச் சர்க்கரையின் அளவு (நீாிழிவு, சர்க்கரை நோய்)
வரை வளவு மானி - graphometer கோணங்கள்
ஞாயிற்று விட்ட அளவி, ஞாயிறு விட்டளவு கருவி - heliometer சூாியனின் விட்ட மாறுபாடு
நீரடர்த்திமானி, நீர்ம அடர்த்தி அளவி - hydrometer நீர்மத்தின் ஒப்படர்த்தி அல்லது தன்னீர்ப்பு (நீர்மத்தின் அடர்த்தி)
ஈரப்பதமானி, ஈரநிலை மானி - hygrometer ஈரப்பதம்
விழிக்குழிவிட்டமானி - inclinometer சாிவு இறக்கத்தின் கோணம்
மைப்பரப்பு ஏற்பு அளவி - inkometer மை
தலையீட்டுமானி, குறுக்கீட்டு மானி - interferometer அலைக்குறுக்கீடு
அகச்சிவப்பு வெப்பநிலை அளவி - infrared thermometer வெப்ப கதிர்வீச்சு அளவிட
வளிம இருப்பு அளவி - katharometer வளிமங்களின் அல்லது வாயுக்களின் பொதிவு
பாலடர்த்திமானி lactometer பாலின் ஒப்படர்த்தி அல்லது தன்னீர்ப்பு
ஒளி அளவி - light meter ஒளி (ஒளிப்படக்கலை, நிழற்படக்கலை)
சுமை அளவி - load cell விசை அளவு
லக்ஸ் மானி, ஒளிர்வலகு - lux meter ஒளிச்செறிவு
காந்தமானி - magnetometer காந்தப்புல வலிமை
வாயுஅழுத்தமானி - manometer காற்றின் அழுத்தம் அல்லது வாயு அழுத்தம்
பொருண்மைப் பாய்வு அளவி - mass flow meter குழாயின் வழியே பயணிக்கும் பாய்மத்தின் பொருண்மைப் பாய்வின் வீதம்
பொருண்மை நிறமாலைமானி - mass spectrometer அயனிகளின் நிறை, திணிவு நிறமாலைகளைக் கொண்டு வேதிப் பொருட்களை அடையாளம் கண்டுபிடிக்க பயன்படும்
அளவுக் குவளை - measuring cup திரவம், உலர் பொருட்கள், உலர் பண்டம்
அளவுக் கரண்டி - measuring spoon ஈரமாகவோ/காய்ந்தோ உள்ள இடுபொருளின் அளவை அளவிட உதவும் கரண்டி
இரசப்பாரமானி - mercury barometer வளிமண்டல அழுத்தம்
நுண்ணளவி, மைக்ரோ மீட்டர் - micrometer சிறு தொலைவு
பல்வகை அளவி - multimeter மின்னழுத்தம், மின்தடை மற்றும் மின்சாரம்
முகில்வேகங்காட்டி - nephoscope மேகங்களின் திசை மற்றும் வேகம் அளவிட
கலங்கல்மானி - nephelometer திரவத்தில் உள்ள துகள்
ஓட்ட அளவி, பாதைமானி - odometer பயணித்த தொலைவு
ஓம் மானி, ஓம் மீட்டர் - ohmmeter மின் தடை
விரைஅளவி - orchidometer ஆண்களின் விதைப்பையின் அளவை அளவிட
அலைவுகாட்டி, ஆசிலோஸ்கோப்பு - oscilloscope அலைவுகள்
சவ்வூடு பரவல் ஆற்றல் மானி - osmometer கூழ்மம், ஒரு பொருளின் கூட்டுப்பொருள், அல்லது கரைசலில் சவ்வூடு பரவலின் வலு
ஊர்தி நிறுத்தமானி, வாகன தரிப்பு மீட்டர் - parking meter ஒதுக்கப்பட்ட பகுதியில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, ஊர்தி நிறுத்தும் உரிமைக்கு பணம் வசூலித்தல்
தூணளவி, காலடித் தொலைவு கணக்குமானி - pedometer காலடி, படிகள்
pH மீட்டர் - pH meter pH கரைசலில் உள்ள வேதியியல் அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை
ஒளிமானி, ஒளிச்செறிவுமானி - photometer ஒளிர்வு அல்லது கதிர்வீச்சுக் உட்படுதல்
தளமட்டமானி - planometer பரப்பளவு
முனைவாக்கமானி, பொலாாிமீட்டர் - polarimeter முனைவு கொண்ட ஒளியின் சுழற்சி, திசைப்பிாித்த ஒளியின் சுழற்சி
மின்னழுத்தமானி - potentiometer மின்னழுத்தம் (மாறுதடையம் )
தரை கரடு முரடு அளவி - profilometer மேற்பரப்புச் சொரசொரப்புத் தன்மை
பாகைமானி - protractor கோணங்கள்
ஈரப்பதமானி - psychrometer ஈரப்பதம்
பருமனறி அடர்த்தி அளவி - pycnometer பாய்மத்தின் அடர்த்தி
சூாியக் கதிர்வீச்சு செறிவு அளவி - pyranometer சூாிய கதிர்வீச்சு
சூாிய மாறிலி அளவி - pyrheliometer நேரடி சூாிய வெப்பக் காப்பு
தீமானி, மீவெப்பநிலை மானி - pyrometer உயர் வெப்பநிலை
கால்வெளி - quadrat குறிப்பிட்ட சிறப்பினத்தின் சதவீத தடுப்பு
படிகக் கற்களின் நுண்ணளவுத் தராசு - quartz crystal microbalance படிவிப்பு செய்த மெல்லிய படலத்தின் தடிமன்
மழைமானி - rain gauge மழையை அளவிட
கதிர்வீச்சுமானி - radiometer மின்காந்த கதிர்வீச்சின் கதிர்வீச்சுப்பாயம்
ஒளிவிலகல்மானி, உப்பளவுமானி - refractometer தாவர இனப்பால் மற்றும் இனிப்புக்கூழ் ஆகியவற்றில் உள்ள சர்க்கரையின் செறிவு
திண்மப்பாயுமை அளவி - rheometer செயல்முறைசார் விசைகளுக்கான விடை
சுழல் அளவி, ரோட்டாமீட்டர் - rotameter மூடிய குழாயில் உள்ள திரவம் அல்லது வாயுவின் அழுத்தம்
அளவுகோல் - ruler நீளத்தை அளவிட
சர்க்கைர அடர்த்தி அளவி - saccharometer கரைசலில் சர்க்கரையின் அளவு
சிதறல் அளவி - scatterometer கரடு முரடான சமுத்திரத்தின் கடினத் தன்மையைப் பயன்படுத்தி காற்று வேகத்தைத் தீர்மானிக்க
நிலநடுக்கமானி - seismometer நிலநடுக்க அலைகள்(நில அதிர்வு)
அறுப்பாகைமானி, மாலுமி கோணமானி - sextant பூமியின் மேற்பரப்பில் இருப்பிடம் காண (கடற் பயணம், நாவாயோட்டல்)
நிறமாலைமானி, வண்ணப்பட்டைமானி - spectrometer ஒளியின் இயல்புகள்
நிறமாலையொளிமானி, வண்ணப்பட்டைப் படமானி - spectrophotometer அலைநீளத்தின் சார்பாக ஒளிச்செறிவு
விரைவுமானி - speedometer வாகனத்தின் வேகம், திசைவேகம்
மூச்சுமானி, மூச்சாற்றல் அளவி - spirometer நுரையீரல் கொள்ளடக்கம்
கோளமானி - spherometer கோளத்தின் ஆரம்
நாடியழுத்தமானி - sphygmomanometer இரத்த அழுத்தம்
தொலைவு அளவி - stadimeter பொருளின் வீச்சு எல்லை
இறுக்கமானி, திாிபுமானி - strainmeter நில அதிர்ச்சி சார்ந்த இறுக்கம், திாிபு
நிலை அலை விகிதமானி - SWR meter நிலை அலை விகிதம்
சுழற்சிவீதமானி - tacheometer தொலைவு, தூரம்
சுழற்சிமானி - tachometer ஒரு நிமிடத்தில் ஏற்படும் சுழற்சி, இரத்தக் கசிவின் வீகிதம், விமானத்தின் வேகம்
வாடகை வண்டிக் காசுமானி - taximeter பயணித்தத் தொலைவு, இடப்பெயர்ச்சி
அழுத்தமானி - tensiometer திரவங்களின் மேற்பரப்பு இழுவிசை
தளமட்ட கோணஅளவி - theodolite செங்குத்துத் தளம், கிடைமட்டத் தளத்திற்கு இடையே கோணத்தை அளவிட
வெப்பமானி - thermometer வெப்பநிலை
சாய்வுமானி - tiltmeter பூமியின் சிறு மாற்றம்
நிறக்கலவைமானி - tintometer நிறம்
உலகளாவிய அளவிடும் கருவி - universal measuring machine வடிவியல் அமைவிடம், கேத்திர கணிதத்திற்குாிய அமைவிடம்
UV மீட்டர் - UV meter ultraviolet light
வெற்றிடமானி - vacuum gauge மிகக் குறைந்த அழுத்தம்
பாகுநிலைமானி - viscometer பாய்மத்தின் பிசுபிசுப்புத் தன்மை(பாகுத் தன்மை)
மின்னழுத்தமானி - voltmeter மின்னழுத்தம், மின்னிலைப்பண்பு
VU மானி - VU meter ஒலியளவு அளவி
வாட்மானி - wattmeter மின்வலு, மின்சக்தி
எடைக் கருவி, நிறுக்கும் பொறி - weighing scale நிறை,எடை
காற்றுத் திசைக்காட்டி, காற்றாடிப் பட்டை - wind vane காற்றின் திசை
நொதிமானி - zymometer நொதித்தல், புளித்தல், உயிர்நொதிப்பு