அளவுகோல்
அளவுகோல் (ruler /rule/line gauge) என்பது அளக்கவோ கோடுபோடவோ பயன்படும் கருவியாகும். இது வடிவியல், தொழில்நுட்ப வரைவியல், பொறியியல், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் பயன்படுகிறது.[1]
வகைகள்
[தொகு]அளவுகோலானது நீண்ட காலமாக பல்வேறு பொருட்களைக் கொண்டு பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்டுள்ளது. சில மரததால் செய்யப்பட்டுள்ளது. நெகிழியிலிருந்தும் அளவுகோல் தயாாிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது, அவற்றில் குறிக்கப்படாமல் அச்சுக்களாக பதிக்கப்படுகிறது. உலோகத்திலான அளவுகோல் நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியது, இது தொழிற்சாலைகளில் பயன்படுகிறது. சில நேரங்களில், உலோகத்தால் ஆன அளவுகோலின் விளிம்புகளை பாதுகாக்க அதை மரத்தாலான மேசையில் பாதுகாக்கப்பட்டு நேர்கோடுகள் வரைய உபயோகப்படுத்தப்படுகிறது. 12 அங்குலம் அல்லது 30 செமீ அளவுள்ள அளவுகோலே படங்கள் வரையக் கூடிய மேசையி்ல் வைக்கப்படுகிறது. சிறிய அளவுகோல் பையில் வைத்து எடுத்துச் செல்ல மிக வசதியாக இருக்கும்.[2] பொிய அளவுகோல் எடுத்துக்காட்டாக 18 அங்குலம் (40 செமீ) சில நேரங்களில் அவசியமாகிறது. கடினமான மரம் மற்றும் நெகிழி அடிகோலானது, ஒரு அடி நீளம், ஒரு மீட்டர் நீள அளவுகோலாக பயன்படுத்தப்படுகிறது. பண்டைய காலங்களில், நீண்ட அளவு குறிக்கப்பட்ட கம்பிகளே பொிய செயல்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. தற்போது நாடாவடிவ அளவுகோல், நில அளவையர் பயன்படுத்தும் வட்டவடிவ அல்லது சீரொளி (நிலத்தை கண்டுபிடிப்பது) அளவுகோலும் உள்ளன. மேசை அளவுகோலானது மூன்று முக்கிய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அவை, அளவிட, நேர் கோடுகள் வரைய, நேரான அளவுகளை பிளேடால் வெட்டுவதற்கும் அவற்றின் மதிப்பை அளந்தறியவும் பயன்படுகிறது. நடைமுறையில் பயன்படுத்தப்படும் அளவுகோலானது துாரங்களை அளவிடப் பயன்படுகிறது.
வரி அளவீடு என்பது அச்சிடும் துறையில் பயன்படுத்தப்படும் ஒரு வகை அளவுகோல். இவை பொதுவாக உலோகம் அல்லது நெகிழி போன்ற பலவகையான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படலாம். ஒரு அடிப்படையான வரி அளவீட்டில் அளவீட்டு அலகுகள் பொதுவாக அங்குலங்கள், அகேட், பிகாஸ் மற்றும் புள்ளிகள் ஆகியவை அடங்கும். மேலும் விரிவான வரி அளவீடுகளில் மாதிரிக்கான அகலங்கள், மாதிரிக்கான பொதுவான பல வகை புள்ளி போன்ற அளவுகளும் இருக்கலாம்.
அளவிடக்கூடிய எந்த ஒரு கருவியும் அளவுகோல் செய்யக்கூடிய அதே பணியைத் தான் செய்கிறது. அளவுகோலானது மடித்து எடுத்துக் போகும் வகையும் (தச்சர்களின் மடிப்பு அளவுகோல்) அல்லது சுருள் வடிவ மீளும் தன்மையுள்ள (உலோகத்தாலான அளவுகோல்) அளவுகோலும் காணப்படுகிறது. இந்தப் பக்கத்தில் உள்ள எடுத்துக்காட்டுகள் 2 மீ (6 அடி 7 அங்குலம்) தச்சர்கள் பயன்படுத்தக்கூடிய அளவுகோலினைக் காட்டுகின்றது, இது ஒரு பாக்கெட்டில் எளிதில் பொருந்தும் வகையில் 25 செ.மீ (10 அங்குலம்) நீளத்தை மடித்து வைக்கும் படியுள்ளது. மேலும் 5 மீ (16 அடி) நாடாவானது மீளும் தன்மையுள்ள ஒரு சிறிய வீடு போன்று உள்ளே அடங்கி விடுகிறது.
பயன்பாட்டில் நேராக இல்லாத ஒரு நெகிழ்வான நீள அளவீட்டு கருவி, தையல்காரரின் துணி நாடா அளவீடாகும். இதில் அளவீடானது அங்குலங்கள் மற்றும் சென்டிமீட்டர்களில் அளவீடு குறிக்கப்பட்டிருக்கும். இது உடலைச் சுற்றி அளக்கப்பயன்படும் அளவின அளவிடப் பயன்படுகிறது, எ.கா., ஒரு நபரின் இடுப்புச் சுற்றளவினைவும், அத்துடன் நேரியல் அளவீட்டு, எ.கா., காலின் நீளத்தையும் அளக்கப் பயன்படுகிறது. பயன்படுத்தாத போது இவ்வளவுகோல் சுருட்டி வைக்கப்படுகிறது, அப்போத சிறிய இடத்தையே எடுத்துக் கொள்கிறது.
சுருட்டி வைக்கப்படும் அளவுகோலில் அளவீடானது சாதாரண அளவுகோல் மாதிாி இல்லாமல் பொிய இடைவெளி விட்டு உலோகத்தாலான வார்ப்பில் குறிக்கப்பட்டிருக்கும். இத்தகைய அளவுகோல் சுருக்க அளவுகோல் என்று அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ruler noun - Definition, pictures, pronunciation and usage notes - Oxford Advanced Learner's Dictionary at OxfordLearnersDictionaries.com". www.oxfordlearnersdictionaries.com. Archived from the original on 25 October 2017. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.
- ↑ "Steel Rule Has Pocket Clip For Use As A Depth Gauge", Popular Science, December 1935, p. 887 bottom right.
நூல்தொகை
[தொகு]- Cherry, Dan. "Collector's guide to rules", Furniture & Cabinetmaking, no. 259, July 2017, ISSN 1365-4292, pp. 52–6
- Rees, Jane and Mark (2010). The Rule Book: Measuring for the Trades. Lakeville, MN: Astragal Press பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-931626-26-2 இணையக் கணினி நூலக மையம் 907853704
- Russell, David R.; with photography by James Austin and foreword by David Linley (2010). Antique Woodworking Tools: Their Craftsmanship from the Earliest Times to the Twentieth Century, Cambridge: John Adamson பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-898565-05-5 இணையக் கணினி நூலக மையம் 727125586, pp. 64–74
- Whitelaw, Ian (2007). A Measure of All Things: The Story of Man and Measurement. Macmillan பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-37026-1 இணையக் கணினி நூலக மையம் 938084552