அளவத்துகொட கலைமகள் தமிழ் வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அளவத்துகொட கலைமகள் தமிழ் வித்தியாலயம் 1992 ஆம் ஆண்டு ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் ஆரம்பிக்கபட்டது. கட்டுகஸ்தோட்டப் வலயத்திற்குட்பட்ட முதலாவது தமிழ் பாடசாலையும் இதுவேயாகும். இப்ப்பாடசாலையானது இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரர் அல்ஹாஜ் ஹமீட் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இப்பாடசாலையின் முதலாவது அதிபராக திருமதி சசிகலா சண்முகநாதன் பதவியேற்றார். ஆரம்பத்தில் 47 மாணவர்களைக் கொண்டிருந்த இந்தப் பாடசாலையானது 2007 ஆம் ஆண்டளவில் 380 மாணவர்களைக் கொண்டுள்ளது. 2004 ஆம் ஆண்டளவில் இப்பாடசாலையில் கபொத (கல்விப் பொதுத் தராதர) சாதாரணதரப் பரீட்சைவரை மாணவர்களைத் தயார்ப்படுத்தும் வசதியினைக் கொண்டுள்ளது. வாசகசாலையின்மை, விடுதி வசதிகள் இன்மைபோன்ற வசதியீனங்கள் இருப்பினும் இப்பாடசாலையானது வறுமையிலும் இன்மையாக சிறந்தமுறையில் திகழ்ந்துவருகின்றது.

உசாத்துணை[தொகு]