அளவடி
அளவடி என்பது நான்கு சீரால் ஆன அடியாகும். இது நேரடி எனவும் கூறப்படும்.
பெயர்க்காரணம்
[தொகு]செய்யுள் நூலார் யாவரும் ஒத்து நேர்ந்துகொண்ட அடி நேரடி. (நேர்தல் - ஒத்துக்கொள்ளுதல்) எதுகை மோனை முதலிய தொடை விகற்பங்களை அறிந்து கணக்கிட உதவுவது நான்கு சீரால் இயன்ற அளவடி. எனவே கணக்கிடுவதற்குப் புலவர் எல்லோரும் அளவடியையே நேர்ந்தனர். ஆகையால் அளவடியின் பெயர் ‘நேரடி’ எனக் கொள்ளப்பெற்றது.[1]
“ | ‘தேம்பழுத் தினியநீர் மூன்றும் தீம்பலா
மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும் மாம்பழக் கனிகளும் மதுத்தண் டீட்டமும் தாம்பழுத் துளசில தவள மாடமே’[2] |
” |
என்னும் இப்பாடல் கலிவிருத்தமாகும். இது நான்கு அடிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அடியும் நான்கு சீர்களால் அமைந்துள்ளது. நான்கு சீர்களைக் கொண்ட இந்த அளவடியில்/ நேரடியில், முறையே நிரையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை. நேர்ஒன்றாசிரியத்தளை என்று மூன்று தளைகள் தோன்றுகின்றன. இதனை மூன்று தளையால் வந்த அடி எனலாம். முத்தளையால் வந்த அடி, அளவடி/நேரடி. இதனையே ‘முத்தளை அளவடி’ என்கின்றது இலக்கணம்.[3]