அல் ஜமா அல் இஸ்லாமியா
அல் ஜமா அல் இஸ்லாமியா (ஆங்கிலம்: Al-Gama'a al-Islamiyya, அரபி: : الجماعة الإسلامية al-jamāʻah al-islāmīyah) எகிப்து நாட்டைச் சேர்ந்த சுணி இஸ்லாமியக் குழு ஆகும். இக்குழுவானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவால் தீவிரவாத இயக்கம் என தடை செய்யப்பட்டுள்ளது.[1] இக்குழுவின் முக்கிய நோக்கம் எகிப்து அரசை அகற்றிவிட்டு முகம்மது முர்ஸியா தலைமையில் ஓர் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது ஆகும்.[2]
இந்த இயக்கம் 1992 முதல் 1998 வரை எகிப்து அரசுக்கு எதிரான தாக்குதல்களின் மூலம் 796 எகிப்தியக் காவலர்களையும், போர் வீரர்களையும் மற்றும் பொது மக்களையும் கொன்றுள்ளது.[3] இந்த அமைப்பிற்கு ஈரான் மற்றும் சூடான் அரசுகள் ஆதரவளிக்கின்றன. மேலும் அல் காயிதா இந்த அமைப்பின் தீவிரவாதச் செயல்களுக்கு உதவுகிறது.[4] எகிப்திய அரசு இவ்வமைப்பின் தீவிரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் உதவியைப் பெறுகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ THE COUNCIL OF THE EUROPEAN UNION, COUNCIL DECISION of 21 December 2005 பரணிடப்பட்டது 2009-02-05 at the வந்தவழி இயந்திரம் on specific restrictive measures directed against certain persons and entities with a view to combating terrorism
- ↑ "Jama'a al-Islamiya rejects Assem Abdel Magued". Egypt Independent. 5 December 2013. பார்க்கப்பட்ட நாள் 6 December 2013.
- ↑ Uppsala Conflict Data Program, Conflict Encyclopedia, The al-Gama'a al-Islamiyya insurgency,Government of Egypt - al-Gama'a al-Islamiyya, viewed 2013-05-03, http://www.ucdp.uu.se/gpdatabase/gpcountry.php?id=50®ionSelect=10-Middle_East# பரணிடப்பட்டது 2015-09-11 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 4.0 4.1 Uppsala Conflict Data Program, Conflict Encyclopedia, The al-Gama'a al-Islamiyya insurgency, viewed 2013-05-03, http://www.ucdp.uu.se/gpdatabase/gpcountry.php?id=50®ionSelect=10-Middle_East# பரணிடப்பட்டது 2015-09-11 at the வந்தவழி இயந்திரம்