அல் கமில் பில் தாரிக்
Appearance
அல் கமில் பில் தாரிக் என்பது இப்னு அல் ஆதிர் எழுதிய ஒரு வரலாற்று நூல் ஆகும். இந்நூலின் பெயரின் பொருள் முழு வரலாறு என்பதாகும். இது 1231ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இந்நூலின் மூன்றாம் பாகம் அரபியிலிருந்து ஆங்கிலத்திற்கு டி. எஸ். ரிச்சர்ட்சு என்பவரால் 2008ஆம் ஆண்டு "அல்-கமில் ஃபில்-தாரிக்கில் இருந்து சிலுவைப் போர் காலம் பற்றிய இப்னு அல் ஆதிரின் தொகுக்கப்பட்ட நிகழ்வுகள்: பாகம் 3. ஆண்டுகள் 589-629/1193-1231: சலாதினுக்குப் பிந்தைய அயூப்பிடுகள் மற்றும் மங்கோலிய ஆபத்து" என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. செங்கிஸ் கான் காலத்தில் சிரியாவின் மொசூல் நகரத்தில் இப்னு அல் ஆதிர் வாழ்ந்தார். செங்கிஸ் கான் குவாரசமியாவைத் தாக்கிய நிகழ்வுகள் இதில் இடம்பெற்றுள்ளன.[1][2]
உசாத்துணை
[தொகு]- ↑ al-Athir 2008
- ↑ Halsal, Paul. "Ibn al-Athir: On The Tatars, 1220-1221CE". Internet Medieval Source Book. Fordham University. பார்க்கப்பட்ட நாள் 20 May 2015.