அல் அஸூமத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல் அஸூமத்
பிறப்புஅல் அஸுமத்
மலையகம், இலங்கை
தொழில்எழுத்தாளர், கவிஞர்

அல் அஸூமத் ஈழத்துக் கவிஞர், ஈழத்து எழுத்தாளர், கலாபூஷணம், மலையகத்தைச் சேர்ந்தவர். இவர் இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரும் சிறந்த தமிழறிவாளரும் ஆவார். இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் நான்கு வருடங்களுக்கும் மேலாக 'கவிதைச் சரம்' நிகழ்ச்சியை நடாத்தி வந்தவர். இவரது இந் நிகழ்ச்சி பல கவிஞர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது. தொலைக் காட்சி, வானொலி, மேடைக் கவியரங்குகள் பலவற்றில் தலைமை வகித்த அனுபவமிக்கவர்.

கலையுலக வாழ்வு[தொகு]

இவர் தமிழ் நாடு, சென்னை, ரஹ்மத் அறக்கட்டளையினர் உலகளாவிய ரீதியில் நடத்திய முகம்மது நபிகள் (ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாற்று நூலுக்கான கைப்பிரதிப் போட்டியில் முதற்பரிசைப் பெற்றவர். இவரது இக் கைப்பிரதி ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுக்கான பிரதியாக அறிஞர் பெருமக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்றது. இவர் முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் 'கவித் தாரகை' விருது வழங்கியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணியினரால் 2008 இல் 'இலக்கிய சாகரம்' பட்டம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டவர். காயல்பட்டினத்தில் தமிழ்நாடு இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய 13வது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் 'தமிழ் மாமணி' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட மூன்று இலங்கையருள் இவரும் ஒருவர்.

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • யாழ். இலக்கிய வட்டத்தின் மிகச்சிறந்த கவிதை நூலுக்கான விருது (குரல் வழிக் கவிதைகள் - கவிதைத்தொகுப்பு 2009)
  • தேசிய அரச சாஹித்திய விருது (வெள்ளை மரம் - சிறுகதைத்தொகுப்பு, 2002)
  • சிரித்திரன் சுந்தர் நினைவு விருது
  • முஸ்லிம் எழுத்தாளர் தேசியக் கவுன்சில் விருது (புலராப் பொழுதுகள் - குறுங்காவியம், 1984)
  • தமிழியல் விருது (அறுவடைக் கனவுகள்)

பட்டங்கள்[தொகு]

  • இலக்கிய சாகரம் - பட்டம் (சிறீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணியினரால் - 2008)
  • கவித் தாரகை - (முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அவர்களால்)

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • குரல் வழிக் கவிதைகள் - கவிதைத்தொகுப்பு
  • வெள்ளை மரம் - சிறுகதைத்தொகுப்பு
  • புலராப் பொழுதுகள் - குறுங்காவியம்
  • அறுவடைக் கனவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_அஸூமத்&oldid=2752680" இலிருந்து மீள்விக்கப்பட்டது