அல் அன்பார் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Al Anbar Province
محافظة الأنبار
அன்பார் மாகாணம்
மாகாணம்
Anbar Governorate
சொற்பிறப்பு: In Persian: warehouse or silo
Location of Al Anbar Province
ஆள்கூறுகள்: 32°54′N 41°36′E / 32.900°N 41.600°E / 32.900; 41.600ஆள்கூறுகள்: 32°54′N 41°36′E / 32.900°N 41.600°E / 32.900; 41.600
Country ஈராக்
Formed1930
நிர்மாணித்தவர்அல் துலைம் பழங்குடி (1706)
Seatரமாடி
அரசு
 • வகைராஜதானி அரசு
 • Bodyஅன்பர் மாகாண சபை
 • ஆளுநர்அலி ஃபர்ஹான் ஹமீத்
பரப்பளவு
 • மொத்தம்138
 • நீர்2
பரப்பளவு தரவரிசை1st
Dimensions
 • நீளம்113
 • அகலம்125
ஏற்றம்45
உயர் புள்ளி450
தாழ் புள்ளி35
மக்கள்தொகை (சூலை 2018 கணக்கின்படி)
 • மொத்தம்1
 • தரவரிசை7th
 • அடர்த்தி13
நேர வலயம்Arabian Standard Time
HDI (2017)0.684[1]
medium

அல் அன்பார் கவர்னரேட் (Al Anbar Governorate, அரபு மொழி: محافظة الأنبار ; muḥāfaẓat al-’Anbār அல்லது அன்பர் மாகாணம் என்பது ஈராக்கின் பரப்பளவில் பெரிய மாகாணம் ஆகும். இது நாட்டின் மேற்குப் பகுதியின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாக உள்ளது. இது சிரியா, ஜோர்தான் மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளுடன் எல்லைகளைப் பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரம் ரமாடி ஆகும். மேலும் மாகாணத்தில் உள்ள பிற நகரங்கள் பல்லூஜா மற்றும் ஹதீதா ஆகியவை ஆகும்.

இந்த மாகாணமானது 1962 க்கு முன்னர் துலைம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் 1976 வரை ரமாடி என அழைக்கப்பட்ட நிலையில், அதன்பிறகு அல் அன்பார் மாகாணம் பெயர் மாற்றப்பட்டது. இந்த மாகாணத்தில் வசிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் சுன்னி முஸ்லிம்கள் மற்றும் பெரும்பாலானவர்கள் துலைம் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் அனைவரும் அரபு மொழி பேசுகிறார்கள்.

2014 ஆம் ஆண்டின் முற்பகுதியில், உள்ளூர் சுன்னி போராளிகளின் உதவியுடன் இசுலாமிய அரசு (ஐ. எஸ். ஐ. எல்) அமைப்பானது ஈராக் அரசாங்கத்திடமிருந்து மாகாணத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர தொடர் போர்களைத் தொடங்கியது. மாகாணத்தில் ஐ. எஸ். ஐ. எல் ஆக்கிரமிப்பை அகற்ற ஈராக் அரசாங்கத்தால் ஏராளமான தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவை அன்பர் போர்த் தொடர் (2015–16), மேற்கு அன்பர் தாக்குதல் (செப்டம்பர் 2017) மற்றும் 2017 மேற்கு ஈராக் போர்த் தொடர் போன்றவையாகும். 2017 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஈராக் அரசாங்கத்தால் இப்பகுதி திறம்பட மீண்டும் கைப்பற்றப்பட்டது.

சொற்பிறப்பு[தொகு]

2005 இல் ரமாடியில் விபத்துக்குள்ளான சிகோர்ஸ்கி சிஎச் -53 சீ ஸ்டாலியன் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற யுஎஸ் ஹெம்டி.

பாரசீக மொழியில் இந்த மாகாணத்தின் பெயருக்கான பொருள் "கிடங்கு" அல்லது " குதிர்", என்பதாகும். இப்பகுதி சிரியா நோக்கிய பழைய பட்டுப் பாதையின் கடைசி நிறுத்தம் / கிடங்கு ஆகும். இதன் பெயர் இஸ்லாமிய மயமாக்களுக்கு முந்தையது ஆகும். மாகாணத்தின் பெயர் இப்பகுதியின் இருந்த ஒரு வரலாற்று கால நகரத்திலிருந்தின் பெயரிலிருந்து பெறப்பட்டது. அந்த நகரத்தின் இடிபாடுகள் பல்லூஜாவிலிருந்து வடமேற்கே 5 கி.மீ தொலைவில் சக்லவியா நகருக்கு அருகில் காணப்படுகின்றன. இந்த அன்பர் நகரானது (பாரசீகத்தில்: பெருஸ் ஷாபூர்) மூன்றாம் நூற்றாண்டில் முந்தெரிட்களால் நிறுவப்பட்டது, இது 634 இல் அரபு வெற்றிக்கு முன்னர் ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமாக இருந்தது. இது 14 ஆம் நூற்றாண்டில் மங்கோலிய படையெடுப்பிற்குப் பிறகு கைவிடப்பட்ட நகரானது. இந்த மாகாணத்திற்கு அரபியில் "களஞ்சியங்கள்" என்று பொருள்தரும் பெயரால் குறிப்பிடுவதன் மூலம் அந்த பழைய நகருக்கு ஒரு போலி அங்கீகாரம் வழங்கப்படுகிறது. மேலும் அன்பர் (أنبار) என்ற சொல்லானது Nbr (نبر) இன் பன்மையாக "தானியங்கள்" என்று பொருள்படும். உண்மையில், Nbr என்பது செவ்வியல் அல்லது நடுத்தர அரபியில் தானியத்தை குறிக்கவில்லை, அல்லது பொதுவாக நவீன அரபியில் இல்லை. இந்த சொல்லானது ஈராக்கை அரேபியர்கள் ஆக்கிரமிப்பதற்கு முன்பு, அதாவது அரபி மொழி அறிமுகமாவதற்கு முன்பு ஏற்கனவே முன்பு இப்பகுதியை ஆண்ட சாசானியப் பேரரசின் காலத்தில் பேசப்பட்ட பயன்படுத்தப்பட்ட அராமேய மொழிப் பெயராகும்.

துலைம் பழங்குடியினர் இப்பகுதியில் வசிப்பதால் மாகாணத்தின் பழைய பெயராக துலைம் என்று அழைக்கப்பட்டது. மேலும் இது லிவா அல்-துலைம் (لواء الدليم) என்று ஒட்டோமான் காலத்தில் அழைக்கப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டில் சஞ்சக் அல்-துலைம் என்று அழைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_அன்பார்_மாகாணம்&oldid=2867820" இருந்து மீள்விக்கப்பட்டது