அல்-துமாமா விளையாட்டரங்கம்
ملعب الثمامة | |
முழுமையான பெயர் | அல் துமாமா விளையாட்டரங்கம் |
---|---|
அமைவிடம் | அல் துமாமா, கத்தார் |
ஆட்கூற்றுகள் | 25°14′07″N 51°31′56″E / 25.235278°N 51.532182°E |
உரிமையாளர் | கத்தார் 2022 பிபா உலகக் கோப்பை உச்ச குழு |
இருக்கை எண்ணிக்கை | 40,000 |
Construction | |
Broke ground | 2017 |
திறக்கப்பட்டது | 21 அக்டோபர் 2021 |
வடிவமைப்பாளர் | இப்ராகிம் எம். சாய்தா (அரபு பொறியியல் பணியகம்) ஈரிம் |
Structural engineer | இசுக்லைச் பெர்கர்மேன் பங்குதாரர்கள், தோர்ண்டன் தோமசெட்டி,[1] |
Services engineer | செயின் ஆலோசகர்கள் (செயின் மற்றும் பங்குதாரர்கள், துபாய்) |
General contractor | அல் சாபர் பொறியியல் டெக்ஃபென் கட்டுமானம் |
அல்-துமாமா விளையாட்டரங்கம் (Al Thumama Stadium) கத்தார் நாட்டின் அல் துமாமா மாவட்டத்தில் உள்ள ஒரு கால்பந்து விளையாட்டரங்கமாகும்.[2] 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெறும் பிபா உலகக் கோப்பை போட்டிகள் இங்கும் நடைபெறுகின்றன.[3]
கத்தாரில் உலகக்கோப்பை காற்பந்து[தொகு]
அல் துமாமா விளையாட்டரங்கம் 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள பிபா உலகக் கோப்பை காற்பந்து போட்டிகளுக்காக கட்டப்பட்ட எட்டு மைதானங்களில் ஒன்றாகும்.[4] அமாத்து பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகில் இவ்விளையாட்டரங்கம் அமைந்துள்ளது.[5] கத்தார் நாட்டின் அல் சாபர் பொறியியல் நிறுவனமும் துருக்கியின் டெக்ஃபென் கட்டுமான நிறுவனமும் இணைந்து கூட்டு முயற்சியாகக் கட்டுமானப் பணியில் குறிப்பிடத்தக்க அளவில் ஈடுபட்டன. கட்டிடக்கலை வடிவமைப்பை அரபு பொறியியல் பணியகத்தின் தலைமை கட்டிடக் கலைஞர் இப்ராகிம் செய்தா உருவாக்கினார்.[6][7] மத்திய கிழக்கு முழுவதும் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் அணியும் பாரம்பரிய தொப்பியான தகியா தொப்பியின் தாக்கம் விளையாட்டரங்க வடிவமைப்பில் இப்ராகிமிற்கு பயன்பட்டது.[8][9][10] அல்-துமாமா விளையாட்டரங்கத்தில் 40000 இருக்கைகள் உள்ளன. 50,000 சதுர மீட்டர் (540,000 சதுர அடி) பரப்பளவுள்ள பொதுப் பூங்கா மைதானத்தைச் சுற்றி அமைந்துள்ளது.[11] உலகக் கோப்பையைத் தொடர்ந்து, மைதானத்தின் பாதி இருக்கைகள் அகற்றப்பட்டு மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.[12][13] 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி அல்-துமாமா விளையாட்டரங்கம் திறக்கப்பட்டது.[9][14]
அல் துமாமா விளையாட்டரங்கம் உட்பட 2022 பிபா உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளை நடத்துவதற்காக கட்டபபட திட்டமிடப்பட்ட இதர விளையாட்டு அரங்குகளின் கட்டுமானத்தை பன்னாட்டு மன்னிப்பு அவை உள்ளிட்ட பல மனித உரிமை அமைப்புகள் கண்டித்தன.[15] 2019 ஆம் ஆண்டு அக்டோபரில் கத்தார் அரசாங்கம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான சீர்திருத்தங்களை அறிவித்தது. நாட்டில் உள்ள அனைத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் பாரபட்சமற்ற குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்தது. அவர்கள் முதலாளியின் அனுமதியின்றி தங்கள் வேலையை மாற்றவோ அல்லது வெளியேறவோ இச்சீர்திருத்தம் அனுமதித்தது. இருப்பினும், முதலாளிகள் தங்கள் தொழிலாளர்கள் மீது சில கட்டுப்பாட்டை வைத்திருக்கும் அமைப்பின் பிற கூறுகள் தொடர்ந்து இருந்தன.[16] 2022 உலகக் கோப்பையின் ஓர் ஆளும் குழுவாக பிபா பலநாட்டு தொழிலாளர்களின் உரிமைகளை பொறுப்பேற்றுக் கொண்டது. அதைப் பற்றிய கருத்துகளை கேட்டு எந்தவொரு பாகுபாடும் ஊதிய முரண்பாடுகளும் அற்ற சுழிய சகிப்புத்தன்மை கொள்கையை தன்னுடைய உச்சகுழுவின் மூலம் கவனித்துக் கொண்டது. தொழிலாளர்கள் குறைகளை எழுப்புவதற்கான சாத்தியமான வழிமுறைகள் மற்றும் அவர்கள் தரத்திற்கு ஏற்ப வாழத் தவறினால் அதற்கான தீர்வுகளை வழங்குவதற்கான நடைமுறைகளையும் வகுத்தது.[17]
வரலாறு[தொகு]
அல்-துமாமா விளையாட்டரங்கத்தின் திறப்பு விழா அக்டோபர் 22, 2021 அன்று எமிர் கோப்பை இறுதிப் போட்டியின் போது நடைபெற்றது.[11][18]
2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் அல்-துமாமா விளையாட்டரங்கத்திற்கு விளையாட்டு மற்றும் அரங்கங்கள் பிரிவில் நில வர்த்தக நிபுணர்களுக்கான பன்னாட்டு சந்தை அமைப்பின் விருது வழங்கப்பட்டது.[19][20]
பிபா அமைப்பின் அரபு கோப்பை 2021 போட்டியின் போது இந்த மைதானம் ஆறு போட்டிகளை நடத்தியது. இதில் புரவலர்களான கத்தார் மற்றும் அல்சீரியா அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டியும் அடங்கும்.[21][22]
நடைபெற்ற போட்டிகள்[தொகு]
2021 பிபா அரபு கோப்பை[தொகு]
தேதி | நேரம் | அணி #1 | முடிவு | அணி #2 | சுற்று |
---|---|---|---|---|---|
1 திசம்பர் 2021 | ![]() |
1–0 | ![]() |
குழு D | |
3 திசம்பர் 2021 | ![]() |
0–0 | ![]() |
குழு A | |
6 திசம்பர் 2021 | ![]() |
1–0 | ![]() |
குழு B | |
7 திசம்பர் 2021 | ![]() |
1–0 | ![]() |
குழு C | |
11 திசம்பர் 2021 | ![]() |
3–5 | ![]() |
காலிறுதி | |
15 திசம்பர் 2021 | ![]() |
0–1 | ![]() |
அரையிறுதி |
2022 பிபா உலகக்கோப்பை[தொகு]
அல் துமாமா விளையாட்டரங்கத்தில் 2022 பிபா உலகக் கோப்பையின் எட்டு போட்டிகளை நடைபெறுகின்றன.[23]
தேதி | நேரம் | அணி. 1 | முடிவு | அணி. 2 | சுற்று | வருகை |
---|---|---|---|---|---|---|
21 நவம்பர் 2022 | 19:00 | ![]() |
– | ![]() |
குழு A | |
23 நவம்பர் 2022 | 19:00 | ![]() |
– | ![]() |
குழு E | |
25 நவம்பர் 2022 | 16:00 | ![]() |
– | ![]() |
குழு A | |
27 நவம்பர் 2022 | 16:00 | ![]() |
– | ![]() |
குழு F | |
29 நவம்பர் 2022 | 22:00 | ![]() |
– | ![]() |
குழு B | |
1 நவம்பர் 2022 | 18:00 | ![]() |
– | ![]() |
குழு F | |
4 திசம்பர் 2022 | 18:00 | குழு D வெற்றியாளர் | – | குழு C இரண்டாமிடம் | சுற்று 16 | |
10 திசம்பர் 2022 | 18:00 | போட்டி 55 வெற்றியாளர் | – | போட்டி 56 வெற்றியாளர் | காலிறுதிப் போட்டி |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Al Thumama Stadium". thorntontomasetti.com. https://www.thorntontomasetti.com/project/al-thumama-stadium. பார்த்த நாள்: 11 February 2022.
- ↑ http://www.sport.clickise.com/2022/10/01/al-thumama-stadium-doha-qatar-ticket-price-how-to-book-tickets-world-cup-2022/
- ↑ "Six facts about Al Thumama Stadium". qatar2022.qa. 20 August 2017 இம் மூலத்தில் இருந்து 22 ஜூன் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180622165931/https://www.sc.qa/en/news/six-facts-about-al-thumama-stadium. பார்த்த நாள்: 11 February 2022.
- ↑ "FIFA World Cup Qatar 2022". fifa.com. https://www.fifa.com/tournaments/mens/worldcup/qatar2022. பார்த்த நாள்: 24 September 2021.
- ↑ "Qatar reveals Al Thumama Stadium update". timeoutdoha.com. 14 September 2020. https://www.timeoutdoha.com/sport-wellbeing/sport/447872-qatar-reveals-al-thumama-stadium-update. பார்த்த நாள்: 17 December 2020.
- ↑ "Sixth stadium announced for Qatar World Cup 2022". Construction Global. 21 August 2020. https://www.constructionglobal.com/construction-projects/al-thumama-stadium-sixth-stadium-announced-for-qatar-world-cup-2022. பார்த்த நாள்: 17 December 2020.
- ↑ "Qatar 2022 stadiums continue to take shape despite pandemic". thepeninsulaqatar.com. 27 October 2021. https://thepeninsulaqatar.com/article/04/01/2021/Qatar-2022-stadiums-continue-to-take-shape-despite-pandemic. பார்த்த நாள்: 16 December 2021.
- ↑ "Get To Know The 2022 Qatar World Cup Stadiums". archdaily.com. 2 August 2018. https://www.archdaily.com/899352/get-to-know-the-8-2022-qatar-world-cup-stadiums. பார்த்த நாள்: 11 February 2022.
- ↑ 9.0 9.1 "Al Thumama Stadium nearing completion". gulf-times.com. 14 November 2020. https://www.gulf-times.com/story/678014/Al-Thumama-Stadium-nearing-completion. பார்த்த நாள்: 18 December 2020.
- ↑ "Qatar and Turkey join forces 'in harmony' to build Al Thumama Stadium". thepeninsulaqatar.com. 1 November 2021. https://thepeninsulaqatar.com/article/23/08/2017/Qatar-and-Turkey-join-forces-%E2%80%98in-harmony%E2%80%99-to-build-Al-Thumama-Stadium. பார்த்த நாள்: 16 December 2021.
- ↑ 11.0 11.1 "Qatar 2022: Football World Cup stadiums at a glance". aljazeera.com. 18 December 2020. https://www.aljazeera.com/sports/2020/12/18/qatar-2022-world-cup-stadiums-at-a-glance. பார்த்த நாள்: 16 December 2021.
- ↑ "Al Thumama stadium making progress ahead of World Cup". en.as.com. 13 November 2019. https://en.as.com/en/2019/11/13/football/1573648794_720852.html. பார்த்த நாள்: 8 December 2021.
- ↑ "Al Thumama Stadium takes shape". thepeninsulaqatar.com. 12 November 2019. https://thepeninsulaqatar.com/article/12/11/2019/Al-Thumama-Stadium-takes-shape. பார்த்த நாள்: 8 December 2021.
- ↑ "Get To Know The 2022 Qatar World Cup Stadiums". archdaily.com. 20 August 2018. https://www.archdaily.com/899352/get-to-know-the-8-2022-qatar-world-cup-stadiums. பார்த்த நாள்: 18 December 2020.
- ↑ "Qatar: "In the prime of their lives": Qatar's failure to investigate, remedy and prevent migrant workers' deaths". amnesty.org. 26 August 2021. https://www.amnesty.org/en/documents/mde22/4614/2021/en/. பார்த்த நாள்: 11 February 2022.
- ↑ "Qatar: Little Progress on Protecting Migrant Workers" (in en). 2020-08-24. https://www.hrw.org/news/2020/08/24/qatar-little-progress-protecting-migrant-workers.
- ↑ "Qatar 2022 organiser launches Workers' Welfare website" (in en). https://www.business-humanrights.org/en/latest-news/qatar-2022-organiser-launches-workers-welfare-website/.
- ↑ "Al Thumama Stadium - When will the sixth Qatar 2022 World Cup venue be inaugurated?". goal.com. 21 September 2021. https://www.goal.com/en-us/news/amir-cup-2021-final-qatar-al-thumama-stadium-2022-world-cup/1d7cfltwe4od616viywqm0h1e6. பார்த்த நாள்: 24 September 2021.
- ↑ "Al Thumama Stadium honoured for innovative design". gulf-times.com. 20 May 2018. https://www.gulf-times.com/story/593386/Al-Thumama-Stadium-honoured-for-innovative-design. பார்த்த நாள்: 14 December 2021.
- ↑ "Qatar's Al Thumama Stadium wins prestigious international architectural accolade". ausleisure.com.au. 9 June 2018. https://www.ausleisure.com.au/news/qatars-al-thumama-stadium-wins-prestigious-international-architectural-acco/. பார்த்த நாள்: 16 December 2021.
- ↑ "2021 FIFA Arab Cup: Participating teams, fixtures and all you need to know". goal.com. 18 December 2021. https://www.goal.com/en-us/news/2021-fifa-arab-cup-qatar-all-you-need-to-know/blta3bed73f82f8fd58. பார்த்த நாள்: 3 May 2022.
- ↑ "Algeria edge Morocco in penalty thriller to set up Qatar semi-final". thepeninsulaqatar.com. 12 December 2021. https://thepeninsulaqatar.com/article/12/12/2021/algeria-edge-morocco-in-penalty-thriller-to-set-up-qatar-semi-final. பார்த்த நாள்: 11 February 2022.
- ↑ "Al Thumama Stadium design looks like a gahfiya reserved for FIFA World Cup 2022". Footballcoal இம் மூலத்தில் இருந்து 1 நவம்பர் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221101154635/https://footballcoal.com/al-thumama-stadium-design-looks-like-a-gahfiya-reserved-for-fifa-world-cup-2022/.