உள்ளடக்கத்துக்குச் செல்

அல்-சுயூத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுலாமிய அறிஞர்
அபு அல்-ஃபாதில் அல்-ரகுமான் இப்னு அபி பக்கர் ஜலால் அல்-தின் அல்-சுயுதி
பட்டம்இப்னு அல் கூத்ப் (புத்தகங்களின் மகன்)
பிறப்பு1445
இறப்பு1505
இனம்அராபியர்
பிராந்தியம்எகிப்து
சட்டநெறிஷாஃபீ, அஷ்அரிய்யா, ஷாதிலி
சமய நம்பிக்கைசுன்னி இசுலாம் இசுலாம்
முதன்மை ஆர்வம்தாஃப்சிர், இசுலாமியச் சட்ட முறைமை, ஃபிக், ஹதீஸ், திருக்குர்ஆன், உசுல் அல்-ஃபிக், வரலாறு, அக்கிதா
ஆக்கங்கள்தாஃப்சிர் ஜலாலின்

இமாம் ஜலாலுத்தீன் அல்-சுயூத்தி (Jalal al-Din al-Suyuti, அரபு மொழி: جلال الدين السيوطي‎; அண். கிபி 1445–1505) என்பவர் எகிப்திய இசுலாமிய அறிஞரும், சட்ட நிபுணரும், ஆசிரியரும், நடுக்காலப் பகுதியில் பிரபலமான ஒரு அரபு எழுத்தாளரும் ஆவார். இசுலாமிய இறையியலில் இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.

இமாம் சுயூத்தி எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் பிறந்தார். சிறு வயதிலேயே அனாதையாக இருந்த இவர் சகல கலைகளிலும் பிரசித்தி பெற்று விளங்கினார். இளம் வயதில் அரபு நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் கல்வி கற்பதற்காகப் பல தடவைகள் பயணம் செய்தார். 1486 ஆம் ஆண்டில் கெய்ரோவில் உள்ள பேபார்சு பள்ளிவாசலில் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இசுலாமிய மார்க்க அறிவைத் தனது 40 ஆவது வயது வரை கற்பித்து வந்தார். அதன் பின்னர் மனிதர்களுடனான சகவாசத்தைத் துண்டித்துக்கொண்டு மார்க்க ஞான நூல்களை எழுதுவதில் தமது காலத்தைக் கழித்தார். ஏறத்தாழ 600 நூல்களை இவர் எழுதியுள்ளார்.

இமாம் சுயூத்தி, இமாம் ஜலாலுத்தீன் அல்மஹல்லீ (றலி) என்பவரோடு இணைந்து எழுதிய ' தப்சீருல் ஜலாலைன் ' என்னும் நூல் இலங்கை, மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள அரபிக் கல்லூரிகளில் பாடத்திட்டத்திற்கமைய கற்பிக்கப்பட்டு வருகின்றது.

இமாம் சுயூத்தி தமது 60 ஆம் வயதில் கி.பி. 1505 ம் ஆண்டு தனது பிறந்த இடமாகிய கெய்ரோ நகரத்தில் காலமானார்.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-சுயூத்தி&oldid=3377077" இலிருந்து மீள்விக்கப்பட்டது