அல்லை ஆறுமுகம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அல்லை ஆறுமுகம் ஈழத்துக் கவிஞர். கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எனப் பல வடிவங்களில் எழுதிய போதும் ஒரு கவிஞராகவே அடையாளம் காணப்பட்டவர்.
கலையுலக வாழ்வு
[தொகு]இவர் பதினைந்து சிறுகதைகளையும், ஆறு மேடை நாடகங்களையும், பல கவிதைகளையும் படைத்துள்ளார். இவர் தனது படைப்புகளினூடு அங்கத நகைச்சுவை உணர்வுடன் அரசியல் பிரச்சனைகளையும் எழுதக் கூடிய ஆற்றல் பெற்றவர். இதுவரையில் இவர் பல கவிதைகளை வடித்திருந்தாலும் இவரது சில கவிதைகள்தான் நூலுருப்பெற்றன. இவர் எழுதி வைத்திருந்த நூலுருப் பெறாத இலக்கியங்களும், சேகரித்து வைத்த பல அரிய நூல்களும், வாழ்ந்த வீடும் இலங்கை இராணுவத்தால் எரியூட்டப் பட்டு விட்டன. ஆனாலும் தான் எழுதிய பல கவிதைகளை மனப்பதிவாக வைத்திருப்பவர்.
வெளிவந்த நூல்கள்
[தொகு]அடைப்புக்குறிகள் (கவிதை)