அல்லைல் புரோமைடு
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-புரோமோபுரோப்-1-ஈன் | |
வேறு பெயர்கள்
அல்லைல் புரோமைடு
3-புரோமோபுரோப்பீன் 3-புரோமோபுரோப்பிலீன் 3-புரோமோ-1-புரோப்பீன் புரோமோஅல்லைலீன் 2-புரோப்பீனைல் புரோமைடு | |
இனங்காட்டிகள் | |
106-95-6 ![]() | |
ChemSpider | 7553 ![]() |
EC number | 203-446-6 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 7841 |
வே.ந.வி.ப எண் | UC7090000 |
| |
UNII | FXQ8X2F74Z ![]() |
பண்புகள் | |
C3H5Br | |
வாய்ப்பாட்டு எடை | 120.99 கி/மோல் |
தோற்றம் | தெளிந்த அல்லது வெளிர் மஞ்சள் நிறத்திரவம் |
அடர்த்தி | 1.398 கி/செமீ3 |
உருகுநிலை | −119 °C (−182 °F; 154 K) |
கொதிநிலை | 71 °C (160 °F; 344 K) |
மிகக்குறைந்த கரைதிறன் கொண்டது | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4697 (20 °செ, 589.2 நேனோமீட்டர்) |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | MSDS at Oxford University |
ஈயூ வகைப்பாடு | நச்சுத்தன்மை கொண்டது (T), எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்டது (F) |
R-சொற்றொடர்கள் | R11, R25 |
S-சொற்றொடர்கள் | S16, S28A, S29, S33, S36/37, S39, S45 |
தீப்பற்றும் வெப்பநிலை | −2 முதல் −1 °செ |
Autoignition
temperature |
280 °C (536 °F; 553 K) |
வெடிபொருள் வரம்புகள் | 4.3–7.3 % |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அல்லைல் புரோமைடு (Allyl bromide) என்பது ஒரு கரிம ஆலைடு ஆகும். இதை 3-புரோமோபுரோப்பீன் என்ற பெயராலும் அழைக்கலாம். பலபடிகள், மருந்தாக்கப் பொருட்கள் மற்றும் இதர கரிமச் சேர்மங்களை தொகுப்பு முறையில் தயாரிப்பதற்கு அல்கைலேற்றக் காரணியாக இச்சேர்மம் பயன்படுகிறது. இயல்பாகவே அல்லைல் புரோமைடு அடர்ந்த, காரமான, நிலைத்த நெடியையுடைய ஒரு தெளிந்த திரவம் ஆகும். அல்லைல் குளோரைடைக்காட்டிலும் வினைத்திறன் அதிகம் கொண்டிருந்தாலும் அல்லைல் புரோமைடு அதிக செலவு அளிக்கக்கூடியதாகும். இந்த பரிசீலனை அதன் பயன்பாட்டிற்கு வழிகாட்டுகிறது. [1]
அல்லைல் ஆல்ககால் சேர்மத்திலிருந்து வர்த்தக முறையில் இதை தயாரிக்கலாம். அல்லைல் குளோரைடு தாமிர புரோமைடு முன்னிலையில் ஐதரசன் புரோமைடுடன் வினைபுரிந்தும் அல்லைல் புரோமைடு தயாரிக்கப்படுகிறது. [1]
பொதுவாக அல்லைல் புரோமைடு ஓர் எலக்ட்ரான் கவர் அல்லைலேற்ற முகவராகும்.[2] இதனுடன் தனிமநிலை துத்தநாகத்தைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் அல்லைல் துத்தநாக புரோமைடைத் தயாரிக்கலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Dagani, M. J.; Barda, H. J.; Benya, T. J.; Sanders, D. C. (2005), "Bromine Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a04_405
- ↑ José C. González-Gómez, Francisco Foubelo, Miguel Yus (2012). "Preparation of Enantioenriched Homoallylic Primary Amines". Org. Synth. 89: 88. doi:10.15227/orgsyn.089.0088.