அல்லைல்டிரைகுளோரோசிலேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல்லைல்டிரைகுளோரோசிலேன்
Allyltrichlorosilane.png
இனங்காட்டிகள்
107-37-9
ChemSpider 13862317
EC number 203-485-9
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
C3H5Cl3Si
வாய்ப்பாட்டு எடை 175.51 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.2011 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 117.5 °C (243.5 °F; 390.6 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அல்லைல்டிரைகுளோரோசிலேன் (Allyltrichlorosilane) என்பது Cl3SiCH2CH=CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமசிலிக்கன் சேர்மமாகும். நிறமற்றதாகவும் வெள்ளை நிறங்கொண்டும் காணப்படும் இச்சேர்மம் குறைந்த உருகுநிலையைப் பெற்றுள்ளது [1].

அல்லைல் குளோரைடுடன் தாமிரம்-சிலிக்கன் கலப்புலோகத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்யும் நேரடிச் செயல்முறை அல்லது முல்லர்-ரோச்சோவ் செயல்முறை வழியாக இது தயாரிக்கப்படுகிறது [2].

டிரைகுளோர் சிலில் மற்றும் அல்லைல் தொகுதி என்ற இரண்டு தொகுதிகளுடன் ஓர் இருசெயல் சேர்மமாக இது செயல்படுகிறது. SiCl3 தொகுதி பெரும்பாலும் ஆல்ககால் பகுப்பு வினையில் ஈடுபட்டு டிரையால்காக்சியல்லைல்சிலேனைத் தருகிறது. இலூயிசு காரங்கள் முன்னிலையில் இவ்வினையாக்கி ஆல்டிகைடுகளை அல்லைலேற்றம் செய்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kočovský, Pavel (2006). "Allyltrichlorosilane". e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis: 1–4. doi:10.1002/047084289X. 
  2. Hurd, Dallas T. "Preparation of vinyl and allyl chlorosilanes" Journal of the American Chemical Society 1945, volume 67, 1813-14. எஆசு:10.1021/ja01226a058