அல்லீன் ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அல்லீன் ஆக்சைடு (Allene oxide) என்பது கரிம வேதியியல் சேர்மமான அல்லீனின் ஒரு ஈபாக்சைடு ஆகும். அல்லீன் ஆக்சைடின் மூலச் சேர்மம் CH2=C(O)CH2 (சிஏஎசு எண் 40079-14-9) ஓர் அரிய மற்றும் வினைத்திறன் மிக்கதாகக் கருதப்படும் கருத்தியல் சேர்மமாகும். குறிப்பிட்ட சில அல்லீன் ஆக்சைடுகள் தனிமைப்படுத்தலுக்கு கொள்ளிடப் பாதுகாப்பு தேவைப்படுகிறது. இத்தகைய சில வழிப்பொருட்களை அல்லீன்களை பெர் அசிட்டிக் அமிலம் சேர்த்து ஈபாக்சினேற்றம் செய்வதன் மூலம் தயாரிக்கமுடியும். அல்லீன் ஆக்சைடுகள் வளையபுரோப்பனோன்களாக மறுசீராக்கல் அடைகின்றன[1].

செயற்கை அல்லீன் ஆக்சைடுகளின் மறைபொருள் தன்மை அசாதாரணமாக இருந்தபோதிலும், அல்லீன் ஆக்சைடுகளின் தோற்றம் இயற்கையாகவே நிகழ்கின்றன. தாவர உண்ணிகளால் தாக்கப்படும் சில தாவரங்களை பாதுகாக்கும் வேதியியல் பாதுகாப்புப் பொருட்களில் இவை இடைநிலைப் பொருள்களாக உள்ளன. குறிப்பாக அல்லீன்-ஆக்சைடு சிந்தேசு நொதிக்கு லினோலெனிக் அமிலத்தின் ஐதரோபெராக்சைடு தளப்பொருளாக உள்ளது. இறுதியாக விளையும் அல்லீன் ஆக்சைடு, அல்லீன் ஆக்சைடு சைக்ளேசினால் யாசுமோனிக் அமிலமாக மாற்றப்படுகிறது[2].

அல்லீன் ஆக்சைடு இடைநிலை வழியாக யாசுமோனிக் அமிலம் தயாரிக்கும் உயிரியல்தொகுப்பு வினையின் வழிமுறை. பெரிதுபடுத்தப்பட்டிருப்பது வினை நிகழும் தளமான பெண்டாடையீன் உள்ளகம்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. T. H. Chan; B. S.Ong (1980). "Chemistry of Allene Oxides". Tetrahedron 36: 2269–2289. doi:10.1016/0040-4020(80)80123-2. 
  2. Schaller, Andreas; Stintzi, Annick (2009). "Enzymes in Jasmonate Biosynthesis - Structure, Function, Regulation". Phytochemistry 70: 1532–1538. doi:10.1016/j.phytochem.2009.07.032. 
  3. Dewick, Paul (2009). Medicinal Natural Products: A Biosynthetic Approach. United Kingdom: John Wiley & Sons, Ltd.. பக். 42–53. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-74168-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லீன்_ஆக்சைடு&oldid=2476439" இருந்து மீள்விக்கப்பட்டது