உள்ளடக்கத்துக்குச் செல்

அல்லார்செண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்லார்செண்டம்
Allargentum
கார்பனேட்டு மீது அல்லார்செண்டம்; அளவு 3.2×2.7×1.4 செ.மீ
பொதுவானாவை
வகைசல்பைட்டு கனிமம்
வேதி வாய்பாடுAg1−xSbx
இனங்காணல்
நிறம்வெள்ளி சாம்பல்
படிக அமைப்புஅறுகோணம்
மோவின் அளவுகோல் வலிமை4
மிளிர்வுஉலோகத்தன்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி10.0 (அளக்கப்பட்டது.), 10.12 (கணக்கிடப்பட்டது.)
மேற்கோள்கள்[1][2]

அல்லார்செண்டம் (Allargentum) என்பது Ag1−xSbx என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இவ்வாய்ப்பாட்டிலுள்ள x = 0.09–0.16 என்ற மதிப்பைக் காட்டுகிறது. ஆண்டிமோணைடு வகுப்பைச் சேர்ந்த இக்கனிமம் சல்பைடுகள் மற்றும் சல்போவுப்புகள் என்ற மீச்சிறப்பு வகுப்பிலும் வைக்கப்படுகிறது. சில சமயங்களில் இது இயற்கை தனிமங்கள் மற்றும் கலப்புலோகங்கள் என்ற வகுப்பிலும் சேர்க்கப்படுவதுண்டு. இந்த மிதமான அரிய கனிமம் வெள்ளி தாதுக்களில் காணப்படுகிறது. எனவே மற்றொரு என்பதற்கான அல்லார் என்ற கிரேக்க சொல்லில் இருந்தும் இலத்தீன் மொழியில் வெள்ளி என்பதற்கான அர்செண்டம் என்ற சொல்லில் இருந்தும் அல்லார்செண்டம் என்ற பெயர் உருவாக்கப்பட்டது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் அல்லார்செண்டம் கனிமத்தை All[3]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Allargentum. Mindat
  2. Allargentum. Webmineral
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லார்செண்டம்&oldid=4133906" இலிருந்து மீள்விக்கப்பட்டது