அல்லாரை
அல்லாரை, இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும்.[1] இக்கிராமத்துக்குத் தெற்கே கச்சாய் கடல் நீரேரி, தென் மேற்கே சாவகச்சேரி, மேற்கே மீசாலை, வடக்கே மந்துவிலும் வட கிழக்கே கொடிகாமம், கிழக்கே கச்சாய் எல்லைகளாக உள்ளன. இந்த கிராமம் பார்ப்பதுக்கு அழகாக இருந்தாலும், பொருளாதார வசதியில் பெரிய அளவில் முன்னேறவில்லை. இலங்கையின் அரசியல் செல்வாக்கும் இந்த கிராமத்தை பொறுத்தவரையில் குறைவுதான். இந்த கிராமத்தில் வாழும் மக்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
கல்வி
[தொகு]அல்லாரை தமிழ் கலவன் பாடசாலை
[தொகு]1930ஆம் ஆண்டிற்கு முன்னர் அல்லாரை, மீசாலை கிழக்கு, வெள்ளாம் போக்கட்டி, கச்சாய் ஆகிய பகுதிகளுக்குப் பொதுவாகக் கச்சாய்க்கிராமத்தில் ஒரு அமெரிக்கன் மிசன் பாடசாலை இயங்கிவந்தத்து. சைவப் பிள்ளைகள் கல்வி கற்பதற்கும் சமய அறிவைப்பெறுவதற்கும் அதுவித வசதியும் இருக்கவில்லை.
எனவே இங்குள்ள சிறார்களின் கல்வி விருத்தியடையவேண்டுமென்ற உயர்ந்தநோக்குடன் அல்லரையைச் சேர்ந்த எஸ் .கே. செல்லையா அவர்கள் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பெரு முயற்சியால் அல்லாரை தமிழ் கலவன் பாடசாலை தொடங்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டு பாடசாலைக் கட்டடத்தினை அமைப்பதற்கான தனது காணி ஒன்றை நன்கொடையாகக் கொடுத்து பாடசாலைக் கட்டடத்திற்கு அத்திவாரமிட்டார். முதலில் அதிபர் விடுதி ஒன்றும் பாடசாலை வகுப்பறைகளுக்காகக் கொட்டிலும் அமைக்கப்பட்டது.
அமரர் திரு. தம்பிமுத்து பாடசாலையின் முதல் அதிபராக நியமனத்தை ஏற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் 30 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் திரு. தம்பிமுத்து ஆசிரியராகக் கடமையாற்றினார். தற்போது வரை திருமதி. க. யோகநாதன் பாடசாலை அதிபர் பொறுப்பையேற்று நடாத்தி வருகிறார்.
கோவில்கள்
[தொகு]- அறுகம்புல் விநாயகர் ஆலையம்
- வீரகத்தி பிள்ளையார் கோவில்
- முத்துமாரி அம்மன் கோவில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 11". பார்க்கப்பட்ட நாள் 13 செப்டெம்பர் 2024.
வெளி இணைப்புகள
[தொகு]- http://www.allaraigtms.sch.lk/ பரணிடப்பட்டது 2012-07-07 at the வந்தவழி இயந்திரம்