அல்மா கில்லர்மோப்ரிட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Alma Guillermoprieto 2018.jpg
2018இல் கில்லர்மோப்ரிட்டோ
பிறப்புஅல்மா எஸ்டெலா கில்லர்மோ பிரிட்டோ
1949 (அகவை 73–74)
மெக்சிக்கோ
பணிபத்திரிக்கையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1978 – present
விருதுகள்மரியா மூர்ஸ் கபோட் விருது
மெகார்தர் பெலோஷிப்
ஜியார்ஜ் போல்க் விருது
ஒரெட்கா ஒய் காசட் விருது
அஸ்டூரியாஸ் பிரின்சஸ் விருது

'அல்மா கில்லர்மோப்ரிட்டோ ( Alma Guillermoprieto ) (பிறப்பு; அல்மா எஸ்டெலா கில்லர்மோ பிரிட்டோ, 1949) ஒரு மெக்சிகன் பத்திரிகையாளர் ஆவார். இவர் ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கப் பத்திரிகைகளுக்காக இலத்தீன் அமெரிக்காவைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். குறிப்பாக தி நியூயார்க்கர் மற்றும் தி நியூயார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் போன்றவை. இவரது எழுத்துக்கள் எசுப்பானியம் பேசும் உலகில் பரவலாகப் பரப்பப்பட்டுள்ளன. மேலும் ஆங்கிலம் மற்றும் எசுப்பானியம் ஆகிய இரண்டிலும் எட்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவரது நூல்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கில்லர்மோப்ரிட்டோ, ஒரு நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் (பின்னர் எழுதிய இரண்டு புத்தகங்களின் பொருள்: சம்பா, 1990, டான்சிங் வித் கியூபா, 2004), 1978 இல் பத்திரிகைக்குத் திரும்புவதற்கு முன்பு, 1981இல் எல் சால்வடோரில் இராணுவம் நிகழ்திய எல் மோசோட் படுகொலையைப் பற்றி எழுதினார். தனது நீண்ட கால இதழியலை சேகரித்து லத்தீன் அமெரிக்கா: தி ஹார்ட் தட் ப்ளீட்ஸ் (1994) மற்றும் லுக்கிங் ஃபார் ஹிஸ்டரி (2001) என ஆங்கிலத்தில், இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அவர் தனது ஆங்கில அறிக்கையை எசுப்பானிய மொழியில் சேகரித்து மொழிபெயர்த்து மூன்று புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். மேக்ஆர்தர் பெல்லோஷிப் (1995), ஜார்ஜ் போல்க் விருது (2001) மற்றும் அஸ்டூரியாஸ் பிரின்சஸ் விருதை (2018) வென்றுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அல்மா கில்லர்மோப்ரிட்டோ, 1949 இல் மெக்சிகோ நகரில் பிறந்தார்.[1][2] தனது பதின்பருவத்தில், தனது தாயுடன் நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்தார். [2] 1969 ஆம் ஆண்டு வரை மெர்ஸ் கன்னிங்ஹாமிடம் நவீன நடனம் பயின்றார். அவர் அவானாவிலுள்ள கியூபா தேசியக் கலைப் பள்ளிகளில் கற்பிக்கும் பணிக்கு இவரைப் பரிந்துரைத்தார். [3] அங்கே சென்று ஆறு மாதங்கள் கழித்தார்.[3] 1962 முதல் 1973 வரை, இவர் ஒரு தொழில்முறை நடனக் கலைஞராக இருந்தார்.

பத்திரிகை வாழ்க்கை[தொகு]

1978 ஆம் ஆண்டில்,இவர் தி கார்டியனில் ஒரு தனது பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்கினார். அது நிகரகுவான் புரட்சியை உள்ளடக்கியது. [2] சென்றார்.[4] எல் மோசோட் படுகொலையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த இரண்டு பத்திரிகையாளர்களில் இவரும் ஒருவர் (மற்றவர் தி நியூயார்க் டைம்ஸின் ரேமண்ட் போனர் ).[5] இதில் எல் சால்வடோரின், எல் மோசோட்டில் சுமார் 900 கிராமவாசிகள், டிசம்பர் 1981 இல் சால்வடோர் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர் .[6]

உசாத்துணை[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Lafuente, Javier (2018-10-15). ""El periodismo se hace a pie, si no, no has hecho nada"" (in es). El País. https://elpais.com/cultura/2018/10/14/actualidad/1539529195_144455.html. 
  2. 2.0 2.1 2.2 "La periodista mexicana Alma Guillermoprieto, Premio Princesa de Asturias de Comunicación". La Razón (ஸ்பானிஷ்). 2018-05-03. 2019-10-02 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2021-11-27 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 Pollitt, Katha (2004-02-29). "Memories of Underdevelopment" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2004/02/29/books/memories-of-underdevelopment.html. 
  4. Meisler, Stanley. "El Mozote Case Study". www.columbia.edu. 2012-11-04 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2021-11-26 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Archived copy". The New Yorker. 2010-01-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-05-09 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  6. "The Dead Tell Their Tales" பரணிடப்பட்டது 2020-05-28 at the வந்தவழி இயந்திரம், NEWSWEEK, Tom Masland, Nov 2, 1992

வெளி இணைப்புகள்[தொகு]