உள்ளடக்கத்துக்குச் செல்

அல்மகிரா கடல்

ஆள்கூறுகள்: 1°S 129°E / 1°S 129°E / -1; 129
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்மகிரா கடல்
Halmahera Sea
Laut Halmahera
தென்கிழக்கு ஆசியாவிற்குள் அல்மகிரா கடலின் அமைவிடம்டம்
அல்மகிரா கடல் is located in இந்தோனேசியா
அல்மகிரா கடல்
அல்மகிரா கடல்
ஆள்கூறுகள்1°S 129°E / 1°S 129°E / -1; 129
வகைகடல்
வடிநில நாடுகள்இந்தோனேசியா
மேற்பரப்பளவு95,000 km2 (37,000 sq mi)

அல்மகிரா கடல் (ஆங்கிலம்: Halmahera Sea; இந்தோனேசியம்: Laut Halmahera) என்பது ஆஸ்திரேலிய மத்திய நிலக்கடல் பகுதிக்கு Australasian Mediterranean Sea கிழக்கே அமைந்துள்ள ஒரு சிறு கடல்; மற்றும் இந்தோனேசிய கடற்பகுதியில் ஒரு நீர்ப்பகுதியாகும்.

இந்தக் கடல் 1° தெற்கு ரேகை; மற்றும் 129° கிழக்கு புவிக்கோட்டில் மையம் கொண்டுள்ளது. வடக்கே பசிபிக் பெருங்கடல், மேற்கே அல்மகிரா, கிழக்கே வைகியோ மற்றும் மேற்கு பப்புவா மற்றும் தெற்கே செராம் கடல் ஆகியவை எல்லைகளாக உள்ளன.

பொது

[தொகு]

அல்மகிரா கடல் ஏறக்குறைய 95,000 சகிமீ (59,000 சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் நிலப்பரப்பு பல தனித்தனி படுகைகள் மற்றும் முகடுகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் முக்கியமானது அல்மகிரா படுகை; இதன் ஆழம் 2039 மீ. ஆகும்.

பன்னாட்டு நீரியல் வரைபட அமைப்பு (International Hydrographic Organization) (IHO) அல்மகிரா கடலை, கிழக்கு இந்திய தீவுக்கூட்டத்தின் (East Indian Archipelago) நீர்நிலைகளில் ஒன்றாக வரையறுக்கிறது.[1]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Limits of Oceans and Seas, 3rd edition" (PDF). International Hydrographic Organization. 1953. Archived from the original (PDF) on 8 October 2011. Retrieved 28 December 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்மகிரா_கடல்&oldid=4229335" இலிருந்து மீள்விக்கப்பட்டது