அல்பைன் நாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பன்னாட்டு எல்லைக்கோடுகளுடன் கூடிய அல்பைன் நாடுகள்

அல்பைன் நாடுகள் (Alpine states or Alpine countries) மேற்கு ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களைக் கொண்ட எட்டு ஐரோப்பிய நாடுகளைக் குறிக்கிறது.[1]

1991ம் ஆண்டின் அல்பைன் மாநாட்டின் தீர்மானத்தின் படி, அல்பைன் பிரதேசத்தின் நாடுகளாக ஆஸ்திரியா, ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, லீக்கின்ஸ்டைன், மொனாக்கோ மற்றும் சுலோவீனியா என எட்டு நாடுகளைக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.[2] அல்பைன் பிரதேசத்தில் 6,200 உள்ளாட்சி மன்றங்கள் உள்ளது.

அல்பைன் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் 28.7% ஆஸ்திரியாவிலும், 27.2% நிலப்பரப்புகள் இத்தாலியிலும், 21.4% நிலப்பரப்புகள் பிரான்சிலும் உள்ளது. மீதமுள்ள 33% நிலப்பரப்புகள் பிற ஐந்து நாடுகளில் அமைந்துள்ளது.

அல்பைன் நாடுகளின் மொத்த மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கினர், 77% விழுக்காடு கொண்ட பிரான்சு, இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவின் அல்பைன் பிரதேசங்களில் வாழ்கின்றனர்.

ஆஸ்திரியாவின் மொத்த நிலப்பரப்பில் 65.5% விழுக்காடும், சுவிட்சர்லாந்து நாட்டின் மொத்த நிலபரப்பில் 65% விழுக்காடும் அல்பைன் பகுதிகளில் அமைந்துள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. EUSALP - EU STRATEGY FOR THE ALPINE REGION
  2. "The contracting Parties of the Alpine Convention". 2011-02-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-02-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பைன்_நாடுகள்&oldid=3232456" இருந்து மீள்விக்கப்பட்டது