அல்பேனியா அறிவியல் அகாதமி
| Akademia e Shkencave e Shqipërisë | |
| சுருக்கம் | ASH / ASA (ஆங்கிலம்) |
|---|---|
| உருவாக்கம் | 10 அக்டோபர் 1972 |
| வகை | தேசிய அகாதமி |
| நோக்கம் | அறிவியல் |
| தலைமையகம் | திறானா, அல்பேனியா |
| ஆள்கூறுகள் | 41°19′35″N 19°49′22″E / 41.32631°N 19.82283°E |
உறுப்பினர்கள் | அகாதமி உறுப்பினர்கள் (முழு உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள், கௌரவ உறுப்பினர்கள், ஓய்வுநிலை உறுப்பினர்கள், நிருபர் உறுப்பினர்கள்) |
| இசுகெந்தர் ஜினுஷி | |
மைய அமைப்பு | அகாதமியின் தலைமைத் குழு |
| வலைத்தளம் | [(https://akad.gov.al/) akad |
அல்பேனிய அறிவியல் அகாதமி (Academy of Sciences of Albania; அல்பேனியா: Akademia e Shkencave e Shqipërisë), அல்பேனியா நாட்டில் 1972இல் நிறுவப்பட்ட அறிவியல் அமைப்பாகும்து.[1] இது அல்பேனியா நாட்டின் மிக முக்கியமான அறிவியல் நிறுவனம் ஆகும். 1980களில், திரானா பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட பல ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த அகாதமியின் அதிகார வரம்பிற்கு மாற்றப்பட்டன.[2] இந்த நிறுவனம் அல்பேனியாவிலும் அல்பேனியாவிற்கு வெளியேயும் உள்ள ஆராய்ச்சி மையங்கள் மற்றும் பிற அமைப்புகளில் ஈடுபட்டுள்ள "அறிவியலாளர்களை" உள்ளடக்கியுள்ளது. 2009ஆம் ஆண்டின் படி, இந்த அகாதமியில் 23 வழக்கமான உறுப்பினர்களும்,[3] 10 இணை உறுப்பினர்களும்,[4] நிரந்தர உறுப்பினர் ஒருவரும்,[5] 26 கௌரவ உறுப்பினர்களும் இருந்தனர்.[6]
1994ஆம் ஆண்டின் புது தில்லி மக்கள் தொகை உச்சிமாநாட்டிலிருந்து வெளிவந்த உச்சிமாநாட்டு அறிக்கையில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்த உலகின் பல அறிவியல் அகாதமிகளுள் இந்த அகாதமியும் ஒன்றாகும்.[7]
இந்த அகாதமி முன்னாள் மன்னர் ஜாக் மன்னரின் அரண்மனையில் இயங்கி வருகிறது.
அமைப்பு
[தொகு]2023ஆம் ஆண்டில், அல்பேனியவியல் ஆய்வுகள் அகாதமி அறிவியல் அகாதமியுடன் ஒருங்கிணைக்கப்பட்டது.[8] இதே வேளையில் அறிவியல் அகாதமி மறுசீரமைக்கப்பட்டது.
நிறுவனங்கள் மற்றும் மையங்கள்
[தொகு]அகாதமியின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்கள்.
- தொல்லியல் நிறுவனம்
- வரலாற்று நிறுவனம்
- மொழியியல் மற்றும் இலக்கிய நிறுவனம்
- மானுடவியல் நிறுவனம்
- கலை ஆய்வுகளுக்கான மையம்
- கலைக்களஞ்சியம் மற்றும் அல்பேனியவியல் வெளியீடுகளுக்கான மையம்
தற்காலிக ஆராய்ச்சி பிரிவுகள்
[தொகு]- உயிரித் தொழில்நுட்பம் மற்றும் மரபியல்
- புவி இயற்பியல்
- நீர் வளங்கள்
- புவி அறிவியல் மற்றும் புவிசார் பொறியியல்
- செயற்கை நுண்ணறிவு
- நானோஅல்ப் (NanoAlb)
- ஆற்றல்
- தேசிய இயற்பியல் நிறுவனம்
- தேசிய கணித நிறுவனம்
- அர்பிரேஷ், அர்வானிட்ஸ் மற்றும் அர்பேனேஷ் மக்களுக்கான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவு
- பயோடெக்னாலஜி மற்றும் மரபியலுக்கான அறிவியல் ஆராய்ச்சி மையம்
அல்பேனிய அறிவியல் அகாதமி நாட்டின் மிகப்பெரிய கல்வி நூலகத்தைக் கொண்டுள்ளது. 1975இல் 10,000 தொகுதிகளுடன் தொடங்கப்பட்ட இந்த நூலகம், 1986ஆம் ஆண்டிற்குள் 812,000 தொகுதிகளை உள்ளடக்கியதாக வளர்ந்தது.[9]
2008ஆம் ஆண்டில், அகாதமியின் பெரும்பாலான ஆராய்ச்சிப் பணிகளுக்கான நிதி திரும்பப் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆராய்ச்சிப் பணிகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு மாற்றப்பட்டன.[10] அகாதமியிலிருந்து பிரிக்கப்பட்ட நான்கு ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து அல்பேனியவியல் ஆய்வுகள் மையத்தை உருவாக்கின.[10][11]
குறிப்பிடத்தக்க தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள்
[தொகு]வழக்கமான உறுப்பினர்கள்
[தொகு]- இசுகெந்தர் ஜினுஷி[12]
- ஆல்பர்ட் டோஜா
- பாடோசு கொங்கோலி[3][12]
- பெகிர் மேட்டா[3][12]
- வாசில் தோலே[3][12]
- கோஸ்டா பர்ஜாபா
- அவ்ரேலா அனஸ்தாசி
- புளோரஷா தாடோ
- நசிம் க்ருடா
- அனெஸ்தி கொண்டிலி
- எபிஜெனி கொங்ஜிகா
- அர்பென் மெர்கோசி
- பெட்ரக் பெட்ரோ
- பாசிம் ரெசுலி
- ஜெவாகிர் சுபாகியு
- ஜானி வாங்ஜெலி
- புளோரன் விலா
- மரிங்லென் வெர்லி[4]
- அனிலா பாபாரிஸ்டோ
தகைசால் உறுப்பினர்கள்
[தொகு]- முசாஃபர் கோர்குதி
- ரெஜப் மேடானி
- பர்த்ஹில் கொலேமி
இணை உறுப்பினர்கள்
[தொகு]- ஆரியன் துரேசி
- சபான் சினானி
- இத்ரிஸ் அஜெட்டி
- அலி அலியு
- பிரான்செஸ்கோ அல்திமாரி
- ஜீன் ஆபவுன்
- அலைன் டுசெலியர்
- பெர்ண்ட் ஜுர்கன் பிஷர்
- விக்டர் ஃபிரைட்மேன்
- எரிக் பி. ஹாம்ப்
- மார்க் கிராஸ்னிகி
- மேட்ஜா மேடெவ்ஸ்கி
- ஆண்ட்ரியா பியரோனி (எத்னோபோட்டனிஸ்ட்)|ஆண்ட்ரியா பியரோனி]]
- ரெஜப் கோஸ்ஜா]
- லுவான் ஸ்டாரோவா
- ரசுவான் தியோடோரெஸ்கு
குறிப்பிடத்தக்க முன்னாள் உறுப்பினர்கள்
[தொகு]- எக்ரெம் காபேஜ்
- ஷபான் டெமிராஜ்
- மென்டர் பெர்மெட்டி
- ஜோர்கோ புலோ
முன்னாள் குறிப்பிடத்தக்க தலைவர்கள்
[தொகு]- அலெக்சு புடா
- சபான் டெமிராஜ்
இதழ்கள்
[தொகு]- இசுடூடியா அல்பானிகா, ISSN 0585-5047.
- ''அல்பேனியா ஜார்னல் ஆப் நேட்சர் அண்டு டெக்னிக்கல் சயன்சசு (Albanian Journal of Natural and Technical Sciences), ISSN 2074-0867.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Salzman, Michael, ed. (2003). The World of Learning 2004 (Directory). London: Taylor & Francis (Europa). pp. 42. ISBN 9781857431827. கணினி நூலகம் 59288367.
- ↑ Misja, Vladimir; Teta, Arqile; Kallulli, Adriatik (1986). Vollmann, W. (ed.). Higher Education in Albania (Report). Monographs on Higher Education. Bucharest: UNESCO-CEPES. p. 33. Retrieved August 21, 2018 – via Internet Archive.
The institutes in question include the Institute of History, the Institute of Linguistics and Literature, the Institute of Folk Culture, the Institute of Nuclear Physics, the Centre for Computer Mathematics, the Seismological Station, and the Hydraulic Research Laboratory.
- 1 2 3 4 "Anëtarë të rregullt" [Regular members]. Anëtarë të rregullt (in அல்பேனியன்). Academy of Sciences of Albania. Archived from the original on March 2, 2012. Retrieved February 20, 2012.
- 1 2 "Anëtarë të Asociuar" [Associated Members] (in அல்பேனியன்). Academy of Sciences of Albania. Archived from the original on May 31, 2011. Retrieved January 6, 2010.[self-published source]
- ↑ "Anëtarë të përhershëm" [Permanent Members] (in அல்பேனியன்). Academy of Sciences of Albania. Archived from the original on May 31, 2011.[self-published source]
- 1 2 "anetare nderi" [Honorary Members] (in அல்பேனியன்). Academy of Sciences of Albania. Archived from the original on May 31, 2011.[self-published source]
- ↑ {{Cite book|url=(https://archive.org/details/populationcomple00popu/page/377)|title=Population — the complex reality: A report of the Population Summit of the world's scientific academies|publisher=North American Press (Fulcrum Publishing)|year=1993|isbn=0-85403-484-6|editor-last=Graham-Smith|editor-first=Sir Francis|editor-link=Francis Graham-Smith|location=Boulder, Colorado|pages=[(https://archive.org/details/populationcomple00popu/page/377) 377–384]|oclc=905776096|via=Internet Archive}}
- ↑ "Riorganizimi i ASA, Akademia e Shkencave: Status i ri si pjesë elitare e kërkimit shkencor" (in அல்பேனியன்). Lexo.al. Retrieved July 10, 2024.
- ↑ Wedgeworth, Robert, ed. (1993). "Albania". World Encyclopedia of Library and Information Services (3rd ed.). Chicago: American Library Association. pp. 40–42. ISBN 9780838906095. கணினி நூலகம் 300362088 – via Google Books.
- 1 2 "Center for Albanological Studies". Historical Dictionary of Albania (2nd). (2010). Plymouth, United Kingdom: Scarecrow Press. No. 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-7380-3. இணையக் கணினி நூலக மையம் 700441787.
- ↑ Marenglen Verli (December 28, 2014), "Milosao", Histori për botimin e historisë [History of History Publication], Gazeta Shqiptare, p. 16, கணினி நூலகம் 777718670
- 1 2 3 4 "ANËTARË TË RREGULLT" [Regular Members] (in அல்பேனியன்). 2018. Archived from the original on April 20, 2019. Retrieved August 20, 2018.