உள்ளடக்கத்துக்குச் செல்

அல்பேனியாவில் கருக்கலைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல்பேனியாவில் கருக்கலைப்பு (Abortion in Albania) 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் நாள் முழுமையாக சட்டப்பூர்வமாக்கப்பட்டது[1]. கர்ப்பத்தின் பன்னிரண்டாவது வாரம் வரை கருக்கலைப்பு அவரவர்களின் தேவைக்கேற்ப அங்கு செய்யப்படலாம் என்ற கொள்கை பின்பற்றப்பட்டது.[2]. கருக்கலைப்பு நடைமுறை மேற்கொள்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பெண்கள் ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய கருத்துரைகள் வழங்கப்பட வேண்டும். மேலும் கருக்கலைப்பு செய்யும் மருத்துவமனைகள் எந்த பெண்களுக்கு கருக்கலைப்பு சிகிச்சையளித்தன என்பது குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு வெளியிட அனுமதிக்கப்படுவதில்லை[2].

என்வர் ஓக்சா அரசாங்கத்தின் போது அல்பேனியா ஓர் இயல்பான இனப்பெருக்க ஆதரவு பிறப்புக் கொள்கையைக் கொண்டிருந்தது[2]. கருக்கலைப்பு சட்டவிரோதமாக நிகழ்வதற்கும் அல்லது பெண்கள் முன்வந்து தாங்களாகவே கருக்கலைப்பு செய்துகொள்ளவும் இது வழிவகுத்தது. ஐரோப்பா முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு தரவுகளின்படி பேறுகால தாய் இறப்பு விகிதத்தில் அல்பேனியா அப்போது இரண்டாவது இடத்தில் இருந்தது. அனைத்து கர்ப்பங்களில் 50% கர்ப்பங்கள் இறுதியில் கருக்கலைப்பில் முடிந்தன என்று மதிப்பிடப்பட்டது[2]. பெண்கள் தங்கள் கர்ப்பத்தை கருக்கலைப்பு செய்வது சமூக ரீதியாக ஒரு குற்றச் செயலாக அங்கு பார்க்கப்பட்டது. மூளைச்சலவை செய்யவும் அவர்கள் அனுப்பப்பட்டார்கள்[2]. கற்பழிப்பு மற்றும் முறையற்ற கருத்தரிப்பு அல்லது கருக்கலைப்பு செய்து கொள்ளும் நோயாளி 16 வயதிற்குட்பட்டவராக இருக்கும் நிகழ்வுகளுக்கு மட்டும் கருக்கலைப்பு 1989 ஆம் ஆண்டு இங்கு சட்டப்பூர்வமாக்கப்பட்டது[2].

விண்ணப்பம் கொடுத்து கருக்கலைப்பு செய்து கொள்ளும் முறை அல்பேனியாவில் 1991 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கருவைக் கலைப்பதுதான் சிறந்தவழி என்று மருத்துவர்கள் குழு ஒப்புக்கொண்டால் மட்டும் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் தங்கள் கர்ப்பத்தை கலைத்துவிட அனுமதிக்கப்பட்டது[2]. முன்னதாக இயற்றப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் 1995 அல்பேனிய சட்டம் ரத்து செய்தது[1].

15-44 வயதுடைய 1000 அல்பேனியப் பெண்களிடம் 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தரவுகளின்படி அவர்களின் கருக்கலைப்பு விகிதம் 9.2 ஆக இருந்தது[3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Aborti – vrasje e fëmijës së palindur (in Albanian) Nr. 8045, data 07. 12. 1995, që është mbështetje e nenit të ligjit nr. 7491, të vitit 1991 "Për dispozitat kryesore kushtetuese" me propozimin e Këshillit të Ministrive, miratuar në Kuvendin Popullor të Shqipërisë.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Albania – ABORTION POLICY – United Nations
  3. "World Abortion Policies 2013". United Nations. 2013. பார்க்கப்பட்ட நாள் 3 March 2014.