அல்டைட்டு
| அல்டைட்டு Altaite | |
|---|---|
நியூ மெக்சிகோவின் தோனா அனா மாகாணத்தின் ஆர்கன் மாவட்டத்தில் உள்ள இல்டாப் சுரங்கத்திலிருந்து கிடைத்த அல்டைட்டு கனிமம் (அளவு: 3.5 × 2.9 × 1.9 செ.மீ) | |
| பொதுவானாவை | |
| வகை | தெலூரைடு கனிமம் |
| வேதி வாய்பாடு | PbTe |
| இனங்காணல் | |
| மோலார் நிறை | 334.8 கி/மோல் |
| நிறம் | வெள்ளீய வெள்ளை முதல் மஞ்சள் கலந்த வெள்ளை; |
| படிக இயல்பு | கனசதுர மற்றும் எண்முக படிகங்கள்; ஆனால் பொதுவாக சிறு மணிகள் |
| படிக அமைப்பு | சம அளவு |
| பிளப்பு | மூன்று திசைகளில் சரியானது கனசதுரங்களை உருவாக்குகிறது. |
| முறிவு | ஒழுங்கற்றது. |
| மோவின் அளவுகோல் வலிமை | 2.5 – 3 |
| மிளிர்வு | உலோகத் தன்மை |
| கீற்றுவண்ணம் | கருப்பு |
| ஒப்படர்த்தி | 8.2 – 8.3 |
| மேற்கோள்கள் | [1][2] |
அல்டைட்டு (Altaite) என்பது PbTeஎன்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஈய தெலூரைடு வகை கனிமமான இது சம அளவு படிக அமைப்பைக் கொண்டுள்ளது. மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. கலீனா கனிமக் குழுவில் இடம்பெற்றுள்ளது. ஏனெனில் இது கலீனாவின் பல பண்புகளைப் பகிர்ந்து கொள்கிறது. வெளிர் நிற கனிமம் வழக்கத்திற்கு மாறாக அதிக அடர்த்தியைக் கொண்டுள்ளது. அல்டைட்டு மற்றும் பிற அரிய தெலூரைடுகள் சல்பைட்டு கனிம வகுப்பில் வகைப்படுத்தப்படுகின்றன.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் அல்டைட்டு கனிமத்தை Alt[3]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
அல்டைட்டு கனிமம் 1845 ஆம் ஆண்டு மத்திய ஆசியாவிலுள்ள அல்தாய் மலைகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மலைகளைத் தவிர, அல்டைட்டு கசகசுத்தானின் சிரியானோவ்சுக்கு நகரம்; அமெரிக்காவின் பிரைசு மாகாணத்திலுள்ள இரிட்ச்சி கிரீக் படிவுகள்; மெக்சிகோவின் மோக்டெசுமா; மற்றும் சிலியின் கோக்விம்போ உள்ளிட்ட பிற இடங்களிலும் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mindat data with locations
- ↑ Webmineral data
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
